மக்களை கவர்ந்த எல்.ஐ.சி.யின் ஜீவன் பிரகதி திட்டம்
ரூ.28 லட்சம் பலன்..வேறு என்னவெல்லாம் இருக்கு?
எல்ஐசி அனைத்து தரப்பினருக்கும்ஏற்ற பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் எல்ஐசியி-ன் ஜீவன் பிரகதி பாலிசி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் முதிர்வு காலத்தில் கணிசமான ஒரு தொகையினை பெற முடியும்,வயதுவரம்பு இந்த திட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் இணைந்து கொள்ளலாம். 45 வயதுக்கு மேல் இணைய முடியாது.
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 20ஆண்டுகள் வரை சேமிக்கலாம். இதன் மூலம் முதிர்வு காலத்தில் கணிசமான தொகையினை பெற முடியும். என்னென்ன பலன் உண்டு? இந்த பாலிசியில் இறப்பு பலனும் உண்டு. இதில் ரைடர் பாலிசி வசதிகளும் உண்டு. இதில் விபத்து காப்பீடும் உண்டு, விபத்தில் ஏற்படும் செயல் திறன் இழப்புக்கும் ரைடர் பாலிசி வசதியும் உண்டு.
இந்த பாலிசிக்கு எதிராக கடன் வசதியும் உண்டு. எனினும் இந்த பாலிசியில் மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தி இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலிசியினை சரண்டரும் செய்து கொள்ளலாம்.
தினசரி ரூ.200 முதலீடு தினசரி 200 ரூபாய் வீதம் மாதம் 6000 ரூபாய் செலுத்தினால் வருடத்திற்கு 72,000 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால்,20 வருடம் கழித்து 28 லட்சம் ரூபாய் முதிர்வு பலனாக பெறலாம்.
இதில் விபத்து காப்பீடாக குறைந்தபட்சம் 10,000 ரூபாயும், அதிகபட்சம் 1 கோடி ரூபாயும் கிடைக்கும். இந்த பாலிசியில் 12- 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும். முக்கிய பலன்கள் 0-5 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -100% 5-10 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில்-125% 11 – 15 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில்-150% 16-20 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில்-200% பிரீமியத்தில் சலுகை இந்த பிரகதி பாலிசியில் பிரீமியம் செலுத்தும்போது ஆண்டு தொகையாக செலுத்தினால்,2% தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் 1% பிரீமியமும் தள்ளுபடியும் கிடைக்கும்.
முதிர்வு காலத்தில் ஒரு கணிசமான தொகை வேண்டும் என நினைக்கின்றனர்.அப்படி நினைப்பவர்களுக்குஇந்த ஜீவன் பிரகதி பாலிசி ஏற்றதொரு திட்டமாகும். இது வயதான காலத்தில் அவர்களுக்கு ஒரு கையிருப்பு இருப்பதை போலவும் இருக்கும்.
இதன்மூலம் அவர்கள் நிதி ரீதியாக யாரையும் எதிர்பாராமல் சுதந்திரமாக இருக்க வழிவகுக்கும். சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பட்ட மக்களிடம் எல்சியில் பாலிசி என்பது பெரும்பாலும் இருக்கும். இது விபத்து போன்ற அவசரக்காலங்களில்அனைவருக்கும் உதவியாக இருக்கும்.