சொந்த வீடு கனவை நனவாக்கும் வீட்டுக் கடன் என்பது மிகப்பெரிய பொறுப்பு.இது நீண்ட கால கடன் பொறுப்பாகவும் அமைவதுடன், வட்டி விகித போக்கு உள்ளிட்ட அம்சங்களை, கடன் பெற்றவர்கள் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். கடனுக்கான மாதத் தவணையின் சுமை அதிகமாக இருந்தால், அதை குறைக்க முயற்சிக்கலாம்.
வட்டி விகித முறை:
புதிய வட்டி விகித முறைக்கு மாறுவதால் தவணை குறையும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
கடன் மாற்றம்:
அண்மை ஆண்டுகளில் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. எனவே, வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு, எந்த வங்கியில்குறைவான விகிதம் உள்ளதோ அங்கு கடனை மாற்றிக்கொள்ளலாம்.
விகித மாற்றம்:
வீட்டுக் கடனில் மாறும் வட்டி விகிதம் மற்றும் நிலையான வட்டி விகிதம் என இரண்டு வகைகள் உள்ளன. நிலையான வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்தால், அதை மாறும் வட்டி விகிதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
முன்பணம்:
கடன் பெற்றவர்கள் அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தலாம்; கடன் சுமை குறையும். கடனுக்கான காலமும் குறையும். இதனால் முன்னதாகவே கடனை அடைக்கலாம். மாதத் தவணையும் குறையும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.
கடன் சீரமைப்பு:
கடனுக்கான காலத்தை நீட்டிக்கலாம்.இதனால் மாதத் தவணைத்தொகையை குறைக்கலாம். இது ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு பொருந்தாது. தற்போது கொரோனா சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள கடன் சீரமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.