” வருகிற 24 , 25 ம் தேதிகளில் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் “
திருச்சி மத்திய அஞ்சல் மண்டலம் வணிக வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோசபின் சில்வியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கடந்த ஆகஸ்ட் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை அஞ்சலக ஆயுள் காப்பட்டுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது .
கிராமப்புறத்தில் உள்ள மக்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகி அஞ்சல் காப்பீட்டினை பெற்று கொள்ளலாம் . ஆகஸ்ட் மாத ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம் வருகிற 24 , 25 ம் தேதிகளில் நடைபெற உள்ளது . திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கிராமிய அஞ்சல் காப்பீடு சிறப்பு முகாம்களில் புதிய பாலிசிகள் பெறப்பட்டன .
இதன் மூலம் இந்த பெருந்தொற்று காலத்தில் 1700 நபர்கள் அஞ்சல் காப்பீடு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள் . திருச்சி மத்திய மண்டலத்தில் 380 தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் சேவை நடைபெற்று வருகிறது .
கடந்த 2020-21ம் ஆண்டு 3.80 லட்சம் ஆதார் பதிவு திருத்தங்களும் , இந்த நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 60,000 ஆதார் பதிவு திருத்தங்களும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது .