திருச்சியில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்!
பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பல பெண்கள் அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்கி மார்பகப் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக சுகாதாரத்துறை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.
திருச்சி தில்லை நகரில் உள்ள சோழா மெடிக்கல் சென்டரில் மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தி வருகிறது.
இங்கு மார்பக பரிசோதனை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை நோய் அளவு, உடல் எடை பருமன் கண்டறிதல் (BMI), உயர் ரத்த அழுத்தம் (BP), இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, மருத்துவர் ஆலோசனை ஆகிய ரூ.1000 மதிப்புள்ள பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் ரூ.350 க்கு செய்யப்பட்டு வருகிறது.
இச்சலுகை அக்டோபர் 31 வரை வழங்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நாள்களிலேயே கண்டறிந்தால் இதனை முழுவதுமாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இம்முகாமில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் பரிசோதனை குறித்த விபரங்களுக்கு 0431-4218333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.