மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் பாலிசி
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான பாலிசியாக எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் ஆதார் பாலிசி உள்ளது. மாற்றுத்திறனாளியின் பெற்றோர் இப்பாலிசியை எடுக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் அரசின் சலுகையை பெற ஊனத்தின் அளவை குறிப்பிடும் வகையில் மருத்துவ சான்றிதழ் பெற்றிருப்பார்கள்.
இதன்படி 40 சதவீதம் மேல் ஊனம் இருக்கும் குழந்தைகளுக்கு இப்பாலிசி எடுக்கலாம்.
பெற்றோர் இல்லா குழந்தைகள் காப்பாளர் மூலமாக பாலிசி எடுக்க முடியும். இதற்கு எல்ஐசியின் அனுமதி வேண்டும். குறைந்தபட்ச காப்பீடு ரூ.50,000 முதல் உள்ளது. மொத்த பிரிமியத் தொகையை ஒரே முறையிலும் கட்ட முடியும். நாம் கட்டும் பாலிசி தொகைக்கு உறுதியான கூட்டுத்தொகை இப்பாலிசியில் கிடைக்கும். உதாரணமாக பாலிசி தொகை ரூ.1 லட்சம் எனில், உறுதி தொகையாக ரூ.10,000 கிடைக்கும். இத்தொகை ஒவ்வொரு வருடமும் பாலிசி தொகையுடன் சேர்த்துக்கொள்வார்கள்.