உங்களுக்கு முத்திரைத்தாள் விற்க ஆசை தானே..உடனே கடை திறக்க முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உண்டு. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக தேவையை பொறுத்து காலியிடம் இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து பெறலாம்.
விண்ணப்பம் செய்பவரின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். கல்வித் தகுதி.. பெருசா ஒன்னும் இல்ல… எழுதப் படிக்க தெரிந்தால் போதும். கண் பார்வை தெளிவாகவும், நல்ல உடற்தகுதி இருப்பதற்கான அரசு சான்றும் அவசியம் தரணும்.
தாசில்தாரிடம் பெற்ற இருப்பிடச் சான்று, சொத்துச் சான்று தேவை. முத்திரைத்தாள் விற்பனையில் அனுபவச் சான்றும் வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விதவைகள் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விற்பனையாளர் காலியிடம் குறித்த செய்திகள் செய்திதாளில் வெளியாகும். முறைப்படியான சான்று இருந்தால் முத்திரைத்தாள் விற்பனையாளர் ஆவது எளிது.
ட்ரை பண்ணித் தான் பாருங்களேன்..!