தொலைநோக்கு பார்வையுடன் தொழில் தொடங்க வேண்டும் – பிர்லா அட்வைஸ்
சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும், திட்டமும் பலருக்கும் உண்டு. தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகளும் முயற்சித்து வருகின்றன. ஏனெனில், புதிய தொழில்களால் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.
தொழில் தொடங்குவோருக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் மட்டுமல்லாமல், நல்ல வழிகாட்டுதலும் தேவை. அவ்வகையில், முன்னணி தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, தொழில் முனைவோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில், தொழில் தொடங்குவோர் உடனடி வெற்றியை எதிர்பார்க்காமல் நீண்டகால பார்வையுடன் தொழில் தொடங்க வேண்டும். நீண்டகால பார்வையை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நீண்ட காலத்தில் நீளவாக்கில் வெற்றிகள் கிடைக்கும் என நினைத்துக்கொள்ளுங்கள். லட்சியம் கொண்ட இளைஞர்களுக்கு இது எளிதல்ல. ஆனால், நான் சொல்வதை நம்புங்கள். நீண்டகால பார்வை வைப்பது உதவும்.
பெரிய வெற்றிகளை அடைவதற்கு நேரமும், பொறுமையும் தேவை என்பதை பெரிய தலைவர்கள் அறிவார்கள். மாணவர்கள் எப்போதும் காலத்துக்கு முன்பாக திட்டமிட வேண்டும். அனைவருக்கும் ஆதரவு நிச்சயமாக தேவை. யாருமே தனியாக வெற்றி பெற முடியாது என்றார்.
குமார் மங்கலம் பிர்லாவுக்கு கடந்த மாதம் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் அவரது பங்களிப்புக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.