ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நிதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வைப் பெற தகுதியில்லை. அத்துடன் ஆசிரியர் பணியை தொடரவும் தகுதியில்லை என்று உத்தரவிட்டார்.
ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தமிழக அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என்றும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் தெரிவித்தார்.