சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரில் இருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களுக்கு அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ நடமாடும் உணவகங்கள், காய்கறி வியாபாரம், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள் போன்ற சுய தொழில்கள் மூலமாக நிலையான வருமானம் பெற்று அவர்களது வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மூலம் தலாரூ. 50000ஃ- மானியம் வழங்கப்பட உள்ளது.
தகுதிகள்:
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.
- 25-45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000ஃ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர் ஆவார்.
விண்ணப்பத்துடன் இணக்கப்படவேண்டியவை:
- கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு. (Self Declaration Certificate)
- வருமான சான்று (Income Certificate)
- குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox)
- ஆதார் அட்டை நகல் (Aadhar Card Xerox)
- தற்போதைய வசிப்பிட முகவரி சான்று (Resident address proof)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024 ஆகும். சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கண்டிப்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.