சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், தனிநபா், மூத்த குடிமக்கள், அறக்கட்டளை டெபாசிட்டுகளுக்கான வட்டியை ஜூன் 1 முதல் உயா்த்துகிறது.
2-ஆண்டு தனிநபா் டெபாசிட்டிற்கு 5.65%-லிருந்து 5.90 %-ஆகவும், 3-5 ஆண்டுக்கு 5.80%-லிருந்து 6.05%-ஆகவும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்கு 2-ஆண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 6.15%-லிருந்து 6.40%-ஆகவும், 3-5 வைப்புக்கு 6.30%-லிருந்து 6.55%-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இப்புதிய வட்டி விகிதம் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.