லட்சக்கணக்கில் லாபம் தரும் சூப்பர் பாலிசி!
எல்.ஐ.சி. எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் பொதுமக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவதோடு அவர்களது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் உமாங் பாலிசி திட்டம். இந்த பாலிசியில் மிகச் சிறிய அளவில் முதலீடு செய்து குறுகிய காலத்திலேயே லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
இந்த பாலிசியை எடுப்பதற்கான வயது வரம்பைப் பொறுத்தவரையில், 95 நாட்கள் முதல் 55 ஆண்டுகள் வரை உள்ளவர்களுக்கு இந்த பாலிசி எடுக்கலாம். இதுவொரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இந்த பாலிசி முடிந்த பிறகு மிகப் பெரிய செட்டில்மெண்ட் தொகை கிடைப்பதோடு, ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகை பென்சன் போல வந்துகொண்டே இருக்கும். அதேபோல, பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது நாமினி அல்லது குடும்ப உறுப்பினருக்கு மொத்தமாக வழங்கப்படும்.
நீங்கள் இந்த பாலிசியை எடுத்து ஒவ்வொரு மாதமும் ரூ.1,302 பிரீமியம் செலுத்தினால் ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்தியிருப்பீர்கள். 30 ஆண்டுகளுக்கு இதைத் தொடர்ந்தால் உங்களுக்கு ரூ.4.58 லட்சம் கிடைக்கும். 31ஆவது ஆண்டிலிருந்து 100ஆவது ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரூ.40,000 கிடைக்கும். மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.27.60 லட்சம்.
எல்.ஐ.சி. ஜீவன் உமாங் பாலிசியின் கீழ், நீங்கள் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். பாலிசியுடன் ஓய்வூதியம் பெற விரும்புவோர் மற்றும் அவர்களின் இறப்புக்குப் பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உதவ விரும்புவோருக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.