நல்ல வருமானம் தரும் டி-ஷர்ட் பிரிண்டிங் தொழில்!
நல்ல வருமானம் தரும் டி-ஷர்ட் பிரிண்டிங் தொழில்!
சிறு தொழில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சிறு தொழில் தான் டி ஷர்ட் பிரிண்டிங் தொழில், இந்த சிறு தொழில் துவங்குவதற்கு அதிக முதலீடு ஒன்றும் தேவையில்லை, குறைந்த முதலீடு இருந்தாலே போதுமானது.
இந்த சிறு தொழில் பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது என்பதால் இத்தொழிலை துவங்கலாம்.
முதலீடு: இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தது 50,000/–& வரை தேவைப்படும். எனவே 50,000/&- இருந்தால் இந்த தொழிலை துவங்கலாம்.
மூலப்பொருட்கள் : டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை முக்கிய மூல பொருட்களே டி ஷர்ட் தான், எனவே டி ஷர்ட்டை மொத்த விலையாக திருப்பூரில் வாங்கி கொள்ளலாம். குறிப்பாக திருப்பூரில் அனுப்புர்பாளையம் மற்றும் காதர்பேட் ஆகிய இடங்களில் டி சேர்ட் மிக குறைவாக கிடைக்கும். இதை தவிர்த்து டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழிலுக்கு sublimation paper, sublimation ink ஆகியவை அவசியம் தேவை.
டி ஷர்ட் பிரிண்டிங் இயந்திரம்: டி ஷர்ட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சாதாரண normal epson printer மிசின் இருந்தாலே போதுமானது.
சந்தை வாய்ப்பு : இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, பிரிண்ட் செய்த டி ஷர்ட்டை அதிகளவு சிறுவயதினார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்க கூடியதாக இருப்பதால், நீங்கள் வீட்டில் இருந்த படியோ அல்லது சிறிய கடை வைத்தோ விற்பனை செய்யலாம்.
குறிப்பாக ஏதேனும் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, அப்பொழுது அந்த நடிகரின் படத்தை டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டி ஷர்ட்டில் பிரிண்டிங் செய்து கொடுத்தாலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
வருமானம்: ஒரு பிரிண்ட் செய்த டி ஷர்ட்டின் விலை ரூபாய் 70 என்று வைத்து கொண்டால் 500 டி ஷர்ட்டை விற்பனை செய்தால் 35,000/-&-க்கு விற்பனை ஆகும். இதர செலவுகள் போக ஒரு ஆர்டரின் போது நாம் 28,000/-& வரை சம்மதிக்க முடியும்.