விவரம் அறியாமல் பல கோடி இழந்த இந்தியர்கள் பெரும் செல்வந்தர் சொன்ன அறிவுரை…
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான திருபாய் அம்பானி அவர்கள், தனது உறவினரின் கோத்தாரி நிறுவனத்திற்கு சென்று மிக சாதாரணமாக அனைவரிடம் எளிய முறையில் பேசும் போது, ‘உங்களுக்கு தெரிந்த தொழிலை மட்டும் செய்ய வேண்டும்.
தில் உள்ள அனைத்து அம்சங்களை, சூட்சமங் களை முழுமையாக கற்று அறிந்து கொள்ள வேண்டும். தெரியாத, அனுபவமில்லாத புதிய துறைகளில் இறங்கக் கூடாது’ என்று கூறுவாராம். அவரின் முழு கட்டுப்பாட்டில் ரிலையன்ஸ் இருந்த வரை இப்படி தான் செயல்பட்டது. பாலிஸ்டர் துணி விற்பனை மற்றும் நெய்வதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக பாலிஸ்டர் இழை, அதன் மூலப் பொருட்களான PSF, Petrochemicals அதன் மூலப் பொருளான petroleum refinery அதன் மூலப் பொருளான hydrocarbon extraction என்று தன் தொழில்omplete backward and forward integration செய்த சாதனையாளர் Core competency என்று MBA வகுப்பில் இதை சொல்வார்கள்.
ஆனால் அவரின் இந்த முக்கிய அறிவுரையை அவரின் இளைய மகன் அனில் செவிமடுக்காமல், சம்மந்தமில்லாமல் reliance capital, reliance communication, reliance
power, reliance defence என்று இஷ்டத் துக்கு கடன் வாங்கி, விரிவுபடுத்தி இன்று திவால் நிலையில் உள்ளார்.
முகேஷ் ரிலையன்ஸ் ஜியோவை துவங்கியதும் இத்தகைய விளைவை ஏற்படுத்தி, அவரின் crown jewel ஆன RIL இல் 25 சதவீத பங்குகளை சவுதி அரேபியாவின் Aramco நிறுவனத்திற்கு விற்று, கடன்களை குறைக்க வேண்டிய நிலை. இதுவரை அப்படி விற்க நேர்ந்தது இல்லை. இதே போல் தான் Zee entertainment, Videocon, Essar நிறுவனங்கள் தம் மூலத் தொழில்களில் இருந்து பல ஆயிரம் கோடிகளை real estate, petroleum, telecom என்று சம்பந்தமில்லாத துறைகளில் முதலீடு செய்து, கடனில் மூழ்கின.