திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 1லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 1லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 2022-2023ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விழா 26.06.2022 அன்று மாலை ஹோட்டல் பத்மாவதியில் நடைபெற்றது.
சங்க தலைவர் அம்முட்டி பாபா தலைமையில் நடந்த இந்த விழாவில் முன்னாள் ஆளுநர் ஜார்ஜ் ராய் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
புதிய தலைவர் அடைக்கலராஜா, செயலாளர் பாரி அஹ்மது, பொருளாளர் திலீபன் உட்பட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பிறகு உறுதி மொழி செய்தனர். புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைந்து முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு வாழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்சி ஜோசப் கல்லூரி உதவி பேராசிரியர் ஜோ. சலோ பங்கேற்று பேசினார். முன்னாள் ஆளுநர் சண்முகவேல், மண்டல தலைவர் சண்முக வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அரிமா விஜயலட்சுமி சண்முகவேல் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 3 சக்கர நாற்காலி, தையல் எந்திரம் , விவசாய மருந்து தெளிப்பான், 30 குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு பொருட்கள், இலவச வேட்டி சேலை என ருபாய் 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் 50 மா மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழாவின் தொடக்கத்தில் நடைபெற்ற சேலம் ராஜேந்திரன் குழுவின் பலூன் & பபுள் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.