மனச்சோர்வுக்கான காரணம்…
நம்முடைய எண்ணத் துக்கும் மனநிலைக்கும் எக்கச்சக்கமான சம்பந்தம் இருக்கிறது. மோசமான மனநிலையானது, மோசமான எண்ணம் மற்றும் செயலுக்கு வழி செய்கிறது. மோசமான எண்ணம் மற்றும் செயல் நம்மை இன்னமும் மோசமான அனுபவங்களைப் பெற வைக்கிறது.
அந்த மோசமான அனுபவங்கள் மனநிலையை இன்னும் அதிக அளவில் பாதிக்கிறது. எனவே, மனநிலையில் வரும் மாறுதல் எதனால் வருகிறது என்பதை நாம் ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கை களை மேற்கொள்ள ஆரம்பித்தால், அதனால் வருகிற அத்தனை பின்விளைவுகளையும் ஒட்டுமொத்தமாக தவிர்க்க முடியும்.
‘‘இரவு கண்விழித்து வேலை பார்த்திருப்போம். உடல் சூடேறியிருக்கும். தேவையான அளவு தண்ணீர் குடித்திருக்க மாட்டோம். அதிகாலையில் எழுவதற்கு அலாரம் வைத்திருப்போம். ஆழ்ந்த தூக்கதில் இருக்கும்போது அலாரம் அலறும். விழித்து ஆஃப் செய்தால் தலைவலிக்க ஆரம்பிக்கும். அன்றைக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இருக்கும். பாஸ் குறை சொல்வார்.
மனநிலை இன்னமும் மோசமாகும் என இது ஒரு தொடர் சங்கிலியாகப் போய்க் கொண்டேயிருக்கும். இதில் மனச்சோர்வுக்குக் காரணியாக இருந்தது எது, மூளையின் குறைபாடா? இல்லை, தூக்கமின்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்ததுதான் இல்லையா?’’