வங்கி கடன் பெற எளிதான வழி….
உத்யமிமித்ரா (http://udayamimitra.in) என்ற வெப்சைட் மூலம் பாரத பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் ரூபாய் வரைக்கும் வங்கியிலிருந்து கடன் பெறவும், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் சமூகம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் மற்றும் சொந்தத் தொழில் தொடங்க ஆசைப்படும் பெண்களுக்கு விருப்பமான தொழில் முயற்சியை ஆரம்பிக்கத் தேவைப்படுற கடன் தொகை ரூ.10 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் வங்கியிலிருந்து வாங்குவதற்கான விண்ணப்பத்தை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
உத்யமிமித்ரா வெப்சைட்டானது நம் நாட்டில் உள்ள சுமார் 1,25,000க்கும் அதிகமான வங்கிகளின் கிளைகள் மற்றும் 17,000த்திற்கும் கூடுதலான ஹேண்ட் ஹோல்டிங் ஏஜென்சிகளுடன் தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய ஆலோசனைகள், சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வேண்டிய தகவல்கள் மற்றும் உதவிகளை பெற முடியும். இந்த இணையதளத்தில் கடன் கேட்டு விண்ணப்பம் பதிவு செய்யும் போது உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நீங்க விரும்புகிற மூன்று வங்கிகளை தேர்வு செய்து உங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இந்த இணையதளம் மூலம் கடன் விண்ணப்பத்தை நாட்டின் எந்த மூலையிலிருந்தும் எந்த நேரத்திலும் நாம விருப்பப்பட்ட வங்கி கிளைக்கு செலவில்லாமல் அனுப்ப முடியும். உங்கள் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் அந்த இணையதளத்திலேயே கண்டறிய முடியும்.