எல்.ஐ.சி. பாலிசிதாரர்களையும் ஏமாற்றி ஆன்லைன் மோசடி..!
எல்.ஐ.சி., அலுவலகம் அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்து பேசுகிறோம். “நீங்கள் உங்கள் கைவசம் இருக்கும் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருவாய் தரும் பாலிசிக்கு அதை மாற்றிக் கொள்ளலாம்” என பேசுவார்கள்.
அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு எவரேனும் தங்கள் பாலிசி பற்றிய தகவல்களை கொடுத்தால் அதை வைத்து அவர்கள் பணத்தை சுருட்டிவிடுகிறார்கள். இதையடுத்து ஏமாந்தோர் பலர் எல்.ஐ.சி.யில் புகார் தெரிவித்த பின்பே இந்த ஆன்லைன் மோசடி வெளியே தெரிந்தது.
இதையடுத்து, ”பாலிசியை சரண்டர் செய்தால், அதிக பணம் பெற்று தருகிறோம் என்பது மாதிரி யாரேனும் போன் மூலம் தொடர்பு கொண்டால், காவல் துறைக்கும், எல்.ஐ.சி.,க்கும் தகவல் தெரிவிக்குமாறும் ஏமாறாமல் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பாலிசிகளை சரண்டர் செய்யுமாறு, எல்.ஐ.சி., ஒரு போதும் கேட்காது என்றும் எல்.ஐ.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.