ஐநாவில் முக்கிய பணி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்மணி
ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதிகோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் தற்போதுள்ள பொருளாதார சவால்களை சமாளிக்க ஆலோசனை வழங்க உள்ள 20 பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவர்.
இவர் உலகமயமாக்கல், சர்வதேச நிதி, வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு முறைகள், வளர்ச்சி தொடர்பான பிரச்னைகள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர். தில்லியில் பிறந்து ஜவகர்லால் நேரு பல்கலையில் 35 வருடம் பணியாற்றிய இவர், தற்போது அமெரிக்க பல்கலையில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றுகிறார். தில்லியில் பொருளாதார ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியவரும் இவரே.