Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கதை முடிஞ்சு போச்சா ரூ.2 ஆயிரம் நோட்டு?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கதை முடிஞ்சு போச்சா,  இனிமே வராதா ரூ.2 ஆயிரம் நோட்டு?

கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் எப்போதும் விமர்சித்து வருகின்றனர்.இந்த சூழலில் பணமதிப்பிழப்பு நேரத்தின் போது வெளியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகளை பதுக்குவோருக்கு இன்னும் எளிதாகிவிட்டது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் காண முடியவில்லை என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக மக்களவையில் மக்கள் பிரதிநிதிகள் சிலர் கேள்வியை எழுப்பியுள்ளனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார். அதன்படி,2018, -19ம் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஆலைகளுக்கு 2019ம் ஆண்டுக்கு பிறகு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே ஆர்டரே வழங்கப்படவில்லை என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பண மதிப்பிழப்பு மிகவும் நல்லது என்று ஆளுங்கட்சியினர் கம்பி கட்டி வருகின்றனர்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.