இது உங்கள் பகுதி… கேள்வி-பதில்
நான் பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் இருக்கிறேன். எனக்கு வேலை கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாவட்ட வேலைவாய்ப்பு வழங்கும் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும். பதிவு மட்டுமல்லாது அவ்வப்போது பல முன்னணி தொழில் நிறுவனங்களை அழைத்து படிப்பிற்கேற்றவாறு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறார்கள் அவர்களை அணுகவும்
படிக்கச் சொல்லி விரட்டிய காலத்தை கடந்து வேலைக்கு போ என்று விரட்டும் காலத்தை எப்படி கடப்பது?
பதில்: படிக்கச் சொல்லி விரட்டிய காலம் உங்களை நீங்களே பட்டை தீட்டிக் கொள்ளச் செய்ய. வேலைக்கு போ என விரட்டுவது பட்டை தீட்டப்பட்ட நீங்கள் ஒளி வீச பிரகாசிக்க.
தொழில் துவக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: எதாவது ஒரு தொழிலை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு மாவட்ட தொழில் மையத்தை அணுகினால் விவரங்கள் கிடைக்கும்.
உற்பத்தி, வர்த்தகம், சேவை விளக்கம் வேண்டும்?
பதில்: மூலப் பொருட்களை பயன்படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்தால் உற்பத்தித் தொழில். உற்பத்தி செய்த பொருளை வாங்கி தேவைப்படும் இடங்களை கண்டறிந்து விற்பனை செய்தால் அது வர்த்தக தொழில்.
உற்பத்தி செய்யாமல், வர்த்தகமும் செய்யாமல் அவற்றைப் பற்றிய விளக்கங்களையும், உற்பத்தி மற்றும் வர்த்தக நுட்பங்களை கற்பித்துக் கொடுப்பது, வர்த்தக ரீதியிலான பணியினை மற்றவருக்கு செய்து கொடுப்பது, பழுதபட்ட பாகங்களை பழுது நீக்கிக் கொடுப்பது, பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கம் பற்றி கற்பித்தல் போன்றவை சேவைத் தொழில்களாகும்.
உங்களுடைய தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கு
ரா.சண்முகம், தொழில்வழிகாட்டி
97919 493334