இந்த வார திருச்சி ஸ்பெஷல்!
1+1 பிரியாணி வேணுமா?
திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள சிபிகிஸிசிளிகிலி திஹிஷிமிளிழி ரெஸ்டாரெண்டில், தற்போது பிரியாணி பிரியர்களுக்காக சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது வாரத்தில் முதல் 4 நாட்கள் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் ஒரு மட்டன் பிரியாணி வாங்குபவர்களுக்கு மற்றொரு மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இச்சலுகை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0431-&4217177
மண்பானையில் கடல் உணவு!
திருச்சி அரசு மருத்துவமனை அருகே புத்தூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Arabian Elite ரெஸ்ராடெண்டில் பிரியாணி, மீல்ஸ், சவர்மா, என பலவித உணவுகள் கிடைக்கிறது. தற்போது, புதிதாக மதிய உணவுடன் மண்பானை கடல் உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், அறிமுக சலுகையாக ரூ.350-க்கு சாதம், விரால் மீன் குழம்பு, இறால் மீன் வருவல், வறுத்த மீன், நண்டு ரசம் ஆகியவை வழங்குகிறது.
பழைய சோறும், மீன் குழம்பும் கிடைக்குது
பழைய சோறு நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் துரித உணவு கொண்ட மீது மோகத்தால் நம் பாரம்பரிய உணவுகளை அலட்சியப்படுத்தி வருகின்றன. தற்போது வெளிநாட்டவர் கூட பழைய சோறின் பெருமைகளையும் பலன்களையும் அறிந்து சுவைக்க தொடங்கியுள்ளனர். மேலும், நட்சத்திர ஹோட்டலிலும் பழைய சோறின் விற்பனை துவங்கியுள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை எதிரே அமைந்துள்ள Hotel Marvic-யில் உள்ள உணவகத்தில் பழைய சோறு மீன்குழம்புடன் ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு டாட்டூ போட்டா…
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த 13ந்தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது Alien Ink Tattoo சென்டர் துவங்கப்பட்டுள்ளது. திறப்பு சலுகையாக 1 டாட்டூ போட்டால் மற்றொரு டாட்டூ இலவசமாக போடப்படுகிறது. இச்சலுகை ஜுலை 13 வரை வழங்கப்படுகிறது.
லைவ் கிச்சனில் கேக்:
திருச்சி போஸ்ட் ஆபிஸ் சாலையில் 17.06.2022 முதல் தி பிரெட் பாஸ்கெட் நிறுவனம் தனது 7வது கிளையை துவங்கியுள்ளது. இக்கிளையை நிறுவனர் ராம்மோகன் அவர்கள் திறந்து வைத்தார். இக்கிளையில் சிறப்பம்சமாக live kitchen மூலம் எல்லா விதமான கேக் அரைமணிநேரத்தில் உடனடியாக செய்து தருகின்றனர். இங்கு பலவிதமான கேக் மட்டுமன்றி சான்வெஜ், பீட்சா, பர்கர், பிஸ்கட், கார வகை நொறுக்கு தீனிகள் என எல்லா விதமான snacks இங்கு சுகாதாரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. மேலும், ஏசியுடன் கூடிய அமர்ந்து உண்ணும்படியான வசதியை ஏற்படுத்தியுள்ளன.