திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் 93வது ஆண்டு விழா
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள அலுவலகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் 93வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைவர் திரு.JJL.ஞானராஜ் அவர்கள் ஆலோசனைபடி துணத்தலைவர் திரு. R.K. கணேஷ் அவர்கள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் திரு. G.ரேன்சன்தாமஸ் ஆரோக்கியராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். செயலாளர் திரு.M. தங்க ராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றி, ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
இணைச்செயலாளர் திரு. T. சீத்தாராமன் அவர்கள் வியாபாரக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய விபரங்கள் பற்றி பேசினார். பொருளாளர் திரு. K.T. தனபால் ஆண்டு வரவு செலவு கணக்குகளை சமர்பித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் திரு. நி.வி. எழில் ஏழுமலை அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.