தன்னம்பிக்கை வளர…
உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்ட தருணத்திலேயே நீங்கள் மற்றவர்களைப் பார்த்து அஞ்சுவதை விட்டொழிப்பீர்கள். இது உங்களுடைய தொழிலுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். உங்களுடைய இந்த நிலைக்கு நீங்கள் அடுத்தவர்களைக் (பாஸ், உங்களுடன் பணிபுரிபவர், வாடிக்கையாளர் என) காரண மாகக் கூறினால், உங்களுடைய நடவடிக்கைகளில் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றுதானே அர்த்தம்?
நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உங்களுடைய பிசினஸ் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதில் உருவாகும் சந்தோஷத்தின் அளவே நிச்சயம் வேறு லெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்.
எடுத்த காரியத்தை முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டிருக்கும் நீங்கள், அத்துடன் அந்தச் செயல் நல்ல படியாக முடியும் என்கிற உங்களுடைய நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இணைக்கிற மாத்திரத்தில் வெற்றி என்பது கைகூடி வந்து உங்களுடன் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
அதே போல், செய்யும் செயலின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும் அதைத் தொடர்ந்து செய்வதற்கான உறுதிப்பாடும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வல்லது. நீங்கள் செய்யும் செயலின் மீது மிக அதிகமான நம்பிக்கையைக் கொண்டிருந்தீர்கள் எனில், என்ன கஷ்டம் வந்தபோதிலும் அதைத் தொடர்ந்து செய்வது என்பதில் உங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் ஏற்படாது.