உடனடி விற்பனை மூலம் லாபம் பார்க்க…
நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் பெயர் சொல்லி கேட்டு வாங்கும் பொருள்கள் (Enquiry based products), அதிகமாக தேவைப்படும் (விற்பனையாகும்) பொருட்கள், (Commercial products),, மிதமாக தேவைப்படும் சிறப்பு (விற்பனையாகும்) பொருட்கள் (Special products) தேங்கி விற்பனையாகும் பொருட்கள் Unsold products liquidation), கம்பெனி விற்பனை அதிகாரியின் அழுத்தத்தினால் வாங்கப்பட்டு விற்பனையாகாமல் இருக்கும் பொருட்கள் (Dumping products)எனப் பல நிலைகளில்,கொள்முதல் செய்ய வேண்டிவரும் . உடனடி விற்பனை மூலம் அதாவது கொள்முதல் செய்த பொருட்களை அப்படியே ரொக்கமாக கைமாற்றி விடும் வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது.
கவனிக்க வேண்டியது விஷயம்
1) நாம் விற்பனை செய்யும் பொருள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறதா ?
2) அந்தப் பொருள் மறுபடியும் கொள்முதல் செய்யும்போது ,தேங்கி நிற்கும் அல்லது அழுத்தத்தினால் வாங்கப்பட்டு விற்பனையாகாமல் இருக்கும் பொருட்கள் நம் மீது திணிக்கப்படுமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம் எனில், அதில் நாம் எடுக்க வேண்டிய இடர் அளவு மற்றும் தாங்குதிறன் அளவைப் பொருத்து லாப அளவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் .
உடனடியாக விற்பனையாகும் பொருட்களை,முடிந்தவரை செலவில்லாமல், கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் செலவில் டெலிவரி செய்யும் யுக்தியை கடைப்பிடிப்பது நல்லது.
மெதுவாக விற்பனையாகும் பொருட்களின் இருப்பை அடிக்கடி சரி பார்த்து.இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மெதுவாக விற்பனையாகும் பொருளின் தற்போதைய மார்க்கெட் நிலவரத்தையும்,பண மதிப்பையும் தெரிந்து வைத்து நேரத்திற்கு ஏற்றாற்போல் விலையை மாற்றி பதிவு செய்து கொள்ள வேண்டும் . ,
நிரந்தரச் செலவினங்கள், வாடகை, ஊழியர் ஊதியம்,கைபேசி கட்டணம், போக்குவரத்து,மின்கட்டணம் குடும்பச் செலவுகள் ,வங்கி செலவுகள், திடீர் செலவுகள் அவசரகாலச் செலவுகள் எல்லாவற்றுக்குமான தோராயமான மொத்த செலவுடன், நிறுவனத்தின் தோராயமான மொத்த லாபம் அதிகரித்திருப்பதை கண்காணிக்க வேண்டும் .