ரியல் எஸ்டேட் துறையில் ‘டாப் 1’ கோடீஸ்வரர்
ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் பெற்றுள்ளார்.
‘கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி ராஜீவ் சிங் சொத்து மதிப்பு, 61 ஆயிரத்து 220 கோடி ரூபாய்’ என, ‘ஹூருன் அண்டு குரோஹி இந்தியா’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் சிங் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 68 சதவீதம் உயர்ந்துஉள்ளது.
இந்த பட்டியலில், ‘மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்’ நிறுவனர் எம்.பி.லோதா, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 20 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து 970 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சந்துரு ரஹேஜா, கே.ரஹேஜா ஆகியோர், 26 ஆயிரத்து 290 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
அடுத்த இடங்களில், ‘எம்பசி’ குழுமத்தின் ஜிதேந்திர விர்வானி, ‘ஓபராய் ரியலிட்டி’ குழுமத் தலைவர் விகாஸ் ஓபராய், ‘ஹிரநந்தானி’ குழுமத்தின் நிரஞ்சன் ஹிரநந்தானி ஆகியோர் உள்ளனர்.
அடுத்து, ‘எம்3எம் இந்தியா’ குழுமத்தின் பசந்த் பன்சால், ‘பக்மானே டெவலப்பர்ஸ்’ குழுமத்தின் ராஜா பக்மானே, ‘ஜி.ஏ.ஆர்., கார்ப்பரேஷன்’ குழுமத்தின் ஜி.அமரேந்தர் ரெட்டி, ‘ரன்வல் டெவலப்பர்ஸ்’ குழுமத்தின் சுபாஷ் ரன்வல் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.