Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

  • எந்த பொருள் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதை பாருங்கள். எந்த நிறுவனம் நம்பிக்கையானது, அதிக கேரண்டி தருகிறது என்பதை எல்லாம் அறிந்த பின் முடிவெடுங்கள்.

 

  • எந்த பொருள், என்ன தரத்தில் வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்களோ அந்த பொருள் பற்றிய சந்தை நிலவரங்கள், எந்தெந்த நிறுவனங்கள் அந்த பொருளை தயாரித்து, என்னென்ன விலையில் விற்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

  •  பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாக படியுங்கள். விளம்பரங்களை பார்த்து உடனே வாங்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்குவேறு ஆணிவேராக தகவல்களை அள்ளித் தருவார்கள்.

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

  • வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்ற வற்றை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என வாங்காதீர்கள். உங்களின் தேவை என்ன என்பதை முதலில் சீர்தூக்கிப் பாருங்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

 

3
  •  மின்சாரத்தை சேமிக்கும் என நட்சத்திர பொருள் வாங்கும் போது கேரன்டி மற்றும் வாரண்டி அட்டை, மேனுவல் ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாக கேட்டு வாங்குங்கள். அத்துடன் வாரண்டி காலம் முடியும் வரை அதை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 

  •  பொருளை வாங்கி வீட்டில் கொண்டு வைத்து விட்டு, எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

 

  •  நீங்கள் வாங்கும் பொருள் பழுதடைந்தால், அதில் உள்ள பழுது நீக்கும் சர்வீஸ் வசதிகள், அதாவது சர்வீஸ் சென்டர் வசதி இருக்கிறதா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் சர்வீஸ் நீங்கள் அணுகக் கூடிய இடங்களில் இருந்தால் மிகவும் நல்லது.

 

  •  விற்பனைக்கு பிந்தைய சேவைகளை அளிக்கும் நிறுவனங்களே சிறந்த பொருளை, தரமான பொருளை வழங்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப பொருளினை வாங்குங்கள்.

 

  • பொருள் வாங்கியதற்கான ரசீது சரி பார்ப்பதும் கேரண்டி, வாரண்டி அட்டைகளில் எழுதி கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவது பொருளின் தரத்திற்கான உத்தரவாதம் ஆகாது. பழுது என்று போனால் அவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பொருத்தே நீங்கள் வாங்குவதை முடிவு செய்யும்.

 

  • சில நிறுவனங்கள் எக்ஸ்ட்ரா இணைப்புகளை இலவசமாக கொடுப்பார்கள். அவை என்னென்ன என்பதை மேனுவலைப் பார்த்தால் தான் தெரியும். பொருள் வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருள்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.