சிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்
சென்னையில் உள்ள தொழில் ஆணையர் மற்றும் வணிக இயக்குனர் அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட மாநில அளவிலான சிறந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
2017–18 மற்றும் 2018–19 ம் ஆண்டின் சிறந்த தொழில் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரமங்கலம் ஆர்.கே.மெட்டல் ரூபிங்ஸ் நிறுவனத்திற்கும் 2016&-17ம் ஆண்டின் சிறந்த நிறுவனத்திற்கான விருது லால்குடி, ரெட்டிமாங்குடியில் உள்ள அபெக்ஸ் இண்டஸ்ட்ரியல் ப்ராடக்ட் லிமிடெட் மற்றும் ஜி.கே. இண்டஸ்ட்ரியல் பார்க் நிறுவனத்துக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விருது மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரவீந்திரன், திருச்சி டிடிட்டிசியாவின் தலைவர் இளங்கோ, செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி டேட் சென்டர் சேர்மன் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.