வருடம் முழுவதும் தள்ளுபடி விலையில் முன்னணி பிராண்டுகளை வழங்கும் திருச்சி Gobuyy
வருடம் முழுவதும் தள்ளுபடி விலையில் முன்னணி பிராண்டுகளை வழங்கும் திருச்சி Gobuyy

கோபை நிறுவனம் 2016 ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஆண்கள், பெண்கள், சிறார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் முன்னணி பிராண்டுகளிடமிருந்து கிடைக்கும். கோபை இன் சிறப்பம்சங்கள் என்னவென்றால் அனைத்துவிதமான முன்னணி பிராண்டுகளும் வருடம் முழுவதும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். நாங்கள் பல வருடங்களாக முன்னணி பிராண்டுகளின் மொத்த வர்த்தகம் (wholesale) செய்து வருகிறோம் இதன் காரணமாக பல முன்னணி பிராண்டுகள் அவர்களுடைய தயாரிப்புகளை எங்களுக்கு மொத்த கொள்முதல் விலையில் தருகிறார்கள். இவ்வாறு கிடைக்கும் பொருள்களை நாங்கள் இந்தியா முழுவதும் மொத்த வியாபாரம் செய்து வந்தோம்.

இந்த நேரத்தில் தெரிந்த நண்பர்கள் தங்களின் சுய உபயோகத்திற்காக குறைந்த விலையில் தரமான பிராண்டுகளின் ஆடைகள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார்கள் ஆகவே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சில்லறை ( retail) விற்பனை பிரிவு தான் கோபை. இங்கு ஆண்களுக்கான ஜீன்ஸ், காட்டன் பேண்ட், ஷர்ட்ஸ், டி-ஷர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆடைகள், உள்ளாடைகள், ஷார்ட்ஸ், ஜாக்கெட் மற்றும் பிளேசர் போன்றவை கிடைக்கும். பெண்களுக்கான குர்த்திஸ், ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ பேண்ட், டி-ஷர்ட்ஸ், நைட் செட், உள்ளாடைகள் போன்றவை கிடைக்கும். குழந்தைகளுக்கான டீ சர்ட், ஷர்ட், ஜீன்ஸ், காட்டன் பேண்ட், குர்தா பைஜாமா செட், பட்டுப்பாவாடை செட், கார்கோ பேண்ட் மற்றும் உள்ளாடைகள் கிடைக்கும்.

இங்கு பிறந்த குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஆடைகளும் கிடைக்கும். எங்கள் நிறுவனத்தில் பெரிய பிராண்டுகளின் ஸ்போர்ட்ஸ் ஷூ , சாண்டல், ஸ்லீப்பர், ஃபார்மல் ஷூ போன்றவை கிடைக்கும்.மேலும் அனைவருக்கும் தேவையான லெதர் பெல்ட், வாலெட், ஸ்கூல் பேக், டிராவல் பேக், டபுள் பேக், ட்ராலி பேக், கம்ப்யூட்டர் பேக், லஞ்ச் பேக், 304 எஸ் எஸ் வாட்டர் பாட்டில் போன்றவை அனைத்தும் கிடைக்கும். Flying Machine, Levi’s, Lee, Wrangler, John players, dnmx, net play, live in, highlander,jockey, tigertrail, cucumber, Biba, avaasa, rangriti, w, safari, Wildcraft, American tourister, safari, Puma, Adidas, performax, Hush puppies போன்ற இன்னும் பல பிராண்டுகள் வருடம் முழுவதும் 10 முதல் 65 % வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.