Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி ‘நைனா கடை’

1

திருச்சி ‘நைனா கடை’

 

ஒரு அடையில எல்லாவித ருசியும் ஒன்னா இருந்தா எப்படி இருக்கும்! அம்புட்டு ருசி அவ்வளவு பக்குவம்.சாப்பாட்டுல சுத்தம் சற்றும் சளைக்காமல் சத்துக்கள் நிறைந்த உணவு.மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கிற கடை. அடை,தோசை,சப்பாத்தி,இட்லி வெறும் 4  ரகம் தான் ஆனால் அதில் அவ்வளவு வகைகள் செய்து அசத்துகிறார் 70 வயதாகும் கேசவன்.

4

சில நாட்களாக இவரின் ருசியான உணவை பலர் மிஸ் செய்திருப்பீர்கள். அவர்களின் பீலிங்ஸ் போக்க தேடத்தொடங்கினோம்…

3

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகே 36 வருடங்களுக்கும் மேலாக நைட்டு உணவக கடையை நடத்திவந்தவர் நைனா என்று அனைவராலும் அழைக்கப்படும் கேசவன் ஐயா அவர்கள்.கடை முதன்முதலில் எண்பதுகளில் BBA படித்த பாலசந்தர் என்ற துடிப்பான இளைஞரால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு கடை இரு கடைகளாக மாறி சுயமாக 18 ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளார் இடையில் விபத்தின் காரணமாக பாலசந்தர் இறந்துவிட அவரது அப்பா கேசவன் தொடர்ந்து கடையை நடத்திக்கொண்டு வருகிறார் தன் மனைவியின் துணையோடு,
இப்போது நைனா கேசவன் அவர்களது நைட்டு கடை திருச்சி மதுரை ரோட்டில் உள்ள சோஃபிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இடம்மாறி கடைப்போட்டாலும் வாடிக்கையாளர்கள் தேடிவந்து டிபன் வகைகளை வாங்கி செல்கிறார்கள்.கேசவன் ஐயாவிடம் பேசினோம்.

திருச்சி நைனா கடை
திருச்சி நைனா கடை

எவ்வளவு உணவு வகைகள் செய்து தரீங்க?என்ன ஸ்பெஷல் ?

நான் முழுக்க முழுக்க சைவ உணவுதான் சமைக்கிறேன்.என் மனைவி மகாலெஷ்மி காலையில் 5மணிக்கெல்லாம் எழுந்து உணவுக்கான மாவுகள்,தேவையான அனைத்தையும் ரெடி செய்து கொடுத்துருவாங்க.அவுங்களுக்கு துணையா ஒரு அம்மாவையும் வேலைக்குக்கு வைச்சிருக்கோம்.
நானும் எனக்கு உதவி செய்ய 2பேரை வேலைக்கு வைச்சிருக்கேன். தயார் செய்து வைக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கிட்டு இங்க வந்து இரவு 7மணிக்கு கடை போட ஆரம்பிப்பேன். நான் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு அரசின் வேளாண் பொறியியல் துறையில் 33ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டேன்.பிறகு இப்பணியை செய்து வருகிறேன்.

சுத்த சைவம் மட்டும் தான்.சுத்தமான கோல்ட்வின்னர் எண்ணெயில் தான் சமைப்பேன்.சமைக்க மற்றும் உணவுக்கு பரிமாறும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி வெயிலில் நன்கு காயவைப்போம்.வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 7மணி முதல் 12மணிவரை கடை நடைபெறும்.கார்த்திகை தீபம்,தைப்பூசம் அன்று மட்டும் கடைக்கு விடுமுறை.

2

உணவு வகைகள்:

தோசை, அடை, சப்பாத்தி, இட்லியில் வெண்ணெய், நெய், பொடி, வெங்காயபொடி, நெய்பொடி, வெண்ணெய்பொடி போன்றவை சேர்க்கப்படுகிறது. தோசையில் – வெங்காயதோசை,தக்காளி தோசை சிறப்பு.அடையில் சிறப்பாக மசால் அடை.சப்பாத்தியில் சிறப்பாக சாதா, பட்டர் சப்பாத்தி, பர்கர் சப்பாத்தி,இனிப்பு சப்பாத்தி, காரம் சப்பாத்தி என வகைவகையாக செய்து அசத்துகின்றார் இந்த நைட்டுகடை நைனா.

தங்களின் உணவை சாப்பிட்டுவிட்டு பாராட்டிய மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது ?

ஆம்,நிறைய இருக்கு பலர் பாராட்டுவாங்க.ஒரு முறை இரவு வேலைல என் கடைப்பக்கம் ஒரு கார் வந்து நின்றது.

உள்ளே டைம்ஸ் ஆப் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் இருந்தார். நல்ல பசி போல அவருக்கு,அவரின் கார் டிரைவரை திட்டினார்.ஏன் இப்படி ரோட்டு கடைல நிப்பாட்டுற வேற நல்ல ஹோட்டல்ல நிப்பாட்டிருக்கலாம் என்று. திட்டிக்கொண்டிருந்தவரிடம் நான் சென்று கூறினேன் , ஐயா என் கடை அப்பத்தையும் தோசையையும் ஒரு முறை சாப்பிட்டு பாருங்க, நல்ல இல்லை என்றால் நீங்க எனக்கு காசு தரவே வேண்டாம் என்றேன்.

அந்த உயரதிகாரியும் என் கடையில் சாப்பிட சம்மதித்தார். நான் சுட்டுக்கொடுத்த தோசையை சாப்பிட்டுவிட்டு என்னிடம் என்ன என்ன வகை தோசைகள் இருக்கின்றன என்று கேட்டுவாங்கி அனைத்துவகைகளையும் சாப்பிட்டு ருசிபார்த்தார். 9மாதங்களாக மீண்டும் மீண்டும் என்னை தேடி வந்து டிபனை வாங்கிசெல்வார்.

என் வாடிக்கையாளர்களுக்கு சிலருக்கு நான் கடை மாற்றியுள்ளது தெரியும் பலருக்கு தெரியப்படுத்த முடியவில்லை … சிலர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு. நான் என்ன செய்வது என்கிறார் நைட்டுகடை நைனா.

தற்போது நைனா கடை….

கோட்டை ஸ்டேஷன் சாலையில் உள்ள  அகர்வால் கண் மருத்துமனை பின்புரம் சித்திவிநாயர் கோவில் எதிர்புறம்…. ஒவ்வொரு நாளும் தினமும் மாலை 7.00 மணிக்கு..முதல் இரவு வரை…

நைனாவின் தொடர்பு எண் – 9894666023. 

 

 

 

5

Leave A Reply

Your email address will not be published.