Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெண்களை தொழில்முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராத்திக்கா சில்க்ஸ்

பெண்களை தொழில்முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராத்திக்கா சில்க்ஸ்

திருச்சி, சிங்காரத்தோப்பில், பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் சங்கமிக்கும் கடலாக விளங்குகிறது ஸ்ரீ ராதிகா சில்க்ஸ். பி.எஸ்.சி. முடித்த விஜயநந்தகுமார் தனது தந்தை சுப்பிரமணியனால் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராதிகா சில்க்ஸ் துணிக்கடையினை கடந்த 1983-ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறார். முதலில் ஆண்களுக்கான ஆடை விற்பனையகமாக தொடங்கப்பட்ட ராதிகா சில்க்ஸ் நாளடைவில் முழுக்க முழுக்க பெண்களுக்கான பிரத்தியேக கடையாகவே மாறியிருக்கிறது.

பெண்களுக்கான டாப்ஸ், நைட்டி, லெக்கின்ஸ், ஃபேன்ஸி காட்டன், காட்டன் புடவைகள், சில்க் காட்டன், பனாரஸ், செட்டிநாடு புடவைகள், எம்பிராய்டிங் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள், கல் பதித்த புடவைகள் என்று பல்வேறு பிரத்தியேகமான, பெண்களுக்கான புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிய வகையான புடவைகள் ரூ.155 முதல் ரூ.1,500 விலை வரை விற்கப்பட்டு வருகிறது. காட்டன் நைட்டி ரூ.120 முதல் ரூ.300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுடிதார் ரகங்களும் ஏராளமாக உள்ளன.

வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு டாப்சும், லெகின்ஸும் வசதியாக இருப்பதால் டாப்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். பெண்கள் புதிய புதிய மாடல்களை எதிர்பார்ப்பதால் புதிய புதிய ரகங்களை தருவித்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஈரோடு, கொல்கத்தா, சூரத் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடி கொள்முதல் செய்து விற்கப்படுவதால், துணிகள் தரமாகவும், மொத்த விலையில் குறைவான விலையிலும் விற்கப்படுகின்றன. இதனால் ராதிகா சில்க்ஸில் அதிகமாக மொத்த விற்பனை நடைபெறுகின்றன.

“பெண்களுக்கான புடவைகள் விற்பதோடு மட்டுமன்றி பெண்களை தொழில்முனைவோராக மாற்றிக் கொண்டு வருகிறது ஸ்ரீ ராதிகா சில்க்ஸ். ரூ.10,000த்தை முதலாகக் கொண்டு மொத்த கொள்முதல் விலையில் ராதிகா சில்க்ஸில் துணியை வாங்கிச் செல்லும் பெண்கள், வீடுவீடாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பல பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளது ராதிகா சில்க்ஸ்.

வீட்டிற்கு நேரடியாக சென்று விற்கும் போது பெண்கள் நிதானமாக தரத்தை ஆராய்ந்து துணி எடுக்கின்றனர். மேலும் பலர் தவணை முறையிலும் துணிகளை விற்கின்றனர். அவர்கள் பணம் வசூல் செய்ய மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்களை சென்று சந்திக்கும் போது தரம் குறித்து விமர்சனம் எழும். எனவே வீடுகளுக்கு சென்று விற்கும் பெண்களுக்கு விலை மட்டுமின்றி ஆடைகளின் தரமும் பெரும் முக்கியத்துவம் பெருகின்றது. இதனால் தரமான ஆடைகளை மட்டுமே தருவித்து விற்பனை செய்து வருகிறோம்” என்கிறார் விஜயநந்தகுமார்.
தொழிலில் முக்கிய தேவை நிதானம், பொறுமை, வாடிக்கையாளரிடம் பழகும் விதம். இவை அனைத்தும் முறையாக கையாள்வதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஸ்ரீ ராதிகா சில்க்ஸ் கடையினையே தேர்வு செய்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.