‘கனெக்டட் டெக்னாலஜி’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, புதிய ‘டி.வி.எஸ்., ஐக்யூப்’ எலக்ட்ரிக் வாகனத்தை, டி.வி.எஸ்., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது..
சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை இருசக்கர வாகனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கனெக்டட் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற பயணங்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன், மேம்பட்ட எலக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் மற்றும் ஸ்மார்ட் கனெட்க் தளத்துடன் திறன்மிக்கதாக இது உள்ளது.
ஸ்மார்ட் எக்ஸ் ஹோம் சார்ஜிங் யூனிட் மற்றும் டி.வி.எஸ்.,ஐக்யூப் மொபைல் போன் செயலி வாயிலாக,பொது சார்ஜிங்கை இணைக்கும் வசதி இதில் உள்ளது.மணிக்கு அதிகபட்சமாக, 78 கி.மீ., வரை பயணிக்கலாம்.முதல், 4.2 வினாடிகளில், 40 கி.மீ., வேகம் வரை செல்லும். பேட்டரி சார்ஜ் பற்றிய நிலையை தெரிவித்தல் உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
இந்த ஸ்கூட்டரின் ஆன் – ரோடு விலை, 1.15 லட்சம் ரூபாய்.‘ஆன்லைன்’ வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.