இந்திய சாலைகளில் 3 ஆயிரம் பேட்டரி ஸ்கூட்டர் விட உபேர் முடிவு..!
வரும் 2040-ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் மாசில்லாத போக்குவரத்து வசதியை உருவாக்கும் இலக்கை எட்டும் நோக்கத்தோடு உபேர் நிறுவனம் முதல் கட்டமாக 3 ஆயிரம் பேட்டரி ஸ்கூட்டர், ஆட்டோ மற்றும் கார்களை அடுத்த ஆண்டு இயக்க திட்டமிட்டுள்ளது.
உபேர் நிறுவனம், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் டிரைவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கியதோடு 30 லட்சம் முகக் கவசங்களையும், 2 லட்சம் கிருமி நாசினிகளையும், டிரைவர்களுக்கு
2 லட்சம் கிருமி நாசினிகளையும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் மருத்துவமனைகள் மற்றும் பார்மசிகளுக்கும் கிளினிக்கு களுக்கும் அத்தியாவசிய சேவையை அளித்துள்ள தாகவும், உபெர் எசென்ஷியல் மூலம் 45 ஆயிரம் சவாரிகள் அளித்துள்ளதாகவும் முன்னணி தன்னார்வ நிறுவனத்துக்கு 50 ஆயிரம் இலவச சவாரிகளை அளித்துள்ள தாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.