உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நகர்ப்புற மக்கள்..!
தனியார் காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் லைப் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனா சூழல் தாக்கம் காரணமாக நகர்ப்புற இந்தியர்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகர்ப்புற இந்தியர்கள் உடல் ஆரோக்கியம் காப்பதில் மற்றும் உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் மொபைல் செயலிகளை பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாடத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நகர்ப்புற இந்தியர்களில் பெரும்பாலானோர், உடல் மற்றும் மன நலம் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்துள்ளது. ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வீட்டு உணவை அதிகம் நாடுவது மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக ஆரோக்கியம் தொடர்பான அணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த ஆய்வு, முப்பது சதவீதத்தினருக்கு மேல் உடல் தகுதியை கண்காணிக்கும் சாதனங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றது.