கிரெடிட் கார்டு என்பது நுகர்வோருக்கு பயனளிப்ப தாகும். அது பல்வேறு சலுகைகள் அளிக்கிறது. ரொக்கப் பணத்துக்கு சிறந்த மாற்று என கிரெடிட் கார்டைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கும்போது, விலையில் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட சதவிகித தொகை கேஷ் பேக்-ஆக கிடைக்கிறது. கிரெடிட் கார்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவதால்தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அந்த தவறுகள் என்ன என்பதை அறிவோம்…
குறைந்தபட்ச தொகையில் கவனம்…
குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டி வரும்பட்சத்தில், தொடர்ந்து அதிக வட்டி கட்டி வரும் நிலை காணப்படும். இன்னும் சிலர் கடனுக்கான தவணை போல் கிரெடிட் கார்டு தொகையை மாதம்தோறும் கட்டி வந்தால், கிரெடிட் ஸ்கோர் உயரும் எனத் தவறாக நினைத்து செயல்படுகிறார்கள். இப்படி செய்யும் பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் குறையத்தான் செய்யும்.
கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பணம்…
கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது அதற்கு சுமார் 500 ரூபாய் பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இப்படி எடுக்கும் தொகைக்கு சுமார் 2% கட்டணம் இருக்கும். மேலும், ஏ.டி.எம் மூலம் பணம் எடுத்தால், வட்டி இல்லா சலுகைக் காலம் எதுவும் கிடையாது. பணம் எடுத்த முதல் நாளில் இருந்தே ஆண்டுக்கு கிட்டத்தட்ட 35% வட்டி கட்ட வேண்டி வரும்.
மறைமுக கட்டணங்களில் கவனம்…
கிரெடிட் கார்டுகளில் முதலாண்டு மட்டும்தான் ஆண்டுக் கட்டணம் இல்லை. அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கும்போது ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டை பெட்ரோல் போடவும் பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு 2.5% கட்டணம் இருப்பதைக் கவனிப்பது அவசியமாகும். காருக்கு ஒரு நாளைக்கு 3&5 லிட்டர் என்கிற கணக்கில் ஆண்டுக்கு 1,000-&1500 லிட்டர் பெட்ரோல் போடும்
போது இந்தக் கட்டணமே பெரிய தொகையாக இருக்கும்.
வட்டி விகிதங்களை கவனிக்கனும்…
கிரெடிட் கார்டு பெறும் பலரும், சுமார் 45 நாட்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கிவிடுகிறார்கள். அந்த வட்டியில்லா காலத்தை தாண்டி பணம் கட்டும்போது ஆண்டுக்கு சுமார் 35% – & 45% வட்டி கட்ட வேண்டும் என்கிற விவரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
கடன் அளவைத் தாண்டி செலவு செய்தல்…
கிரெடிட் கார்டுக்கு என தரப்பட்டிருக்கும் கடன் அளவுக்குள் செலவு செய்வது நல்லது. கிரெடிட் வரம்பு ரூ.1,00,000 லட்சம் எனில், அவரின் மாத கிரெடிட் கார்டு செலவை ரூ.30,000-க்குள் வைத்துக் கொள்வது நல்லது.
கார்டு பாதுகாப்பை கவனிக்கனும்…
கிரெடிட் கார்டு எண், சி.வி.வி எண், பின் ஆகியவற்றை செல்போன் மற்றும் இ-மெயிலில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். செல்போன் மற்றும் கிரெடிட் கார்டை ஒரே நேரத்தில் தவறவிடும் பட்சத்தில் ஆபத்துதான். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் முன் அட்டையின் பின்புறத்தில் கையொப்பமிடுங்கள். கையொப்பமிடாத அட்டை தொலைந்துவிட்டால் கடுமையான சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பில்லிங் ஸ்டேட்மென்டைக் கவனிக்கனும்…
கிரெடிட் கார்டு பில்லிங் ஸ்டேட்மென்ட் வந்தவுடன் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செலவுகளை எல்லாம் நீங்கள்தான் செய்திருக்கிறீர்களா என்பதை சரி பாருங்கள்..சில நேரங்களில் நீங்கள் வாங்காத பொருள்களுக்கான செலவு தவறாக பில்லில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
கடன் வரம்பு நிர்ணயம் :
கிரெடிட் கார்டைப் பெற்றுக் கொண்டதும், அதைப் பயன்படுத்தி கடன் மூலம் பொருட்கள் வாங்கு வதற்கான வரம்பை மிகக் குறைவாக அல்லது பூஜ்யமாக ‘செட்’ செய்து கொள்ளுங்கள். அந்த கார்டைக் கொண்டு ஷாப்பிங் செய்யப்போகிற நிலையில் அன்று மட்டும் அதன் வரம்பை அதிகரித்துக்கொள்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
மாத பில் கட்ட தவறுதல்…
கிரெடிட் கார்டு பணம் கட்டத் தவறினால், செலுத் தாத தொகைக்கு வட்டி மற்றும் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி மாதத்துக்கு 3% -& 3.5% அதாவது, ஆண்டுக்கு 36% முதல் 42% ஆகும். இது நிலுவைத் தொகை அடிப்படையில் விதிக்கப்படுவதால், வட்டியானது நாள்தோறும் கூடிக்கொண்டே போகும். வட்டிக்கு வட்டி விதிக்கும்போது அது பெரும் கடனாக மாற வாய்ப்புண்டு.