உலக அளவில் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் வள்ளி விலாஸ் தசாங்கம்!
கடவுள் படங்கள் நிறைந்த பூஜை அறையில் நுழைந்தவுடன், உள்ளத்தில் பக்தி மணம் கமழ, ஆன்மீக சிந்தனை வேரூன்ற உறுதுணையாக இருப்பதில் முக்கிய இடம் வகிப்பது தசாங்கம். தசாங்கத்தின் நறுமணம், வீடு, அலுவலகத்தை கோவில் போல் மாற்றி ஒரு தெய்வீக அமைதியைக் உண்டாக்கும்.
வெட்டிவேர், லவங்கம், வெள்ளை குங்குலியம், ஜாதிக்காய், மட்டிப்பால், திருவட்ட பச்சை உள்ளிட்ட பத்து வகை மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தசாங்கத்தின் புகை உடலுறுப்பில் ஏற்படும் வியாதிகளை குணமாக்கும் சக்தி கொண்டது. மனதில் தோன்றும் எதிர்மறை ஆற்றல் மறைந்து உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் மகிமை கொண்டது தசாங்கம். உலகளவில் தசாங்கம் தயாரிப்பில் அதிக பங்களிப்பு கொண்டது திருச்சி மாவட்டம் என்ற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. லண்டன், ஸ்ரீலங்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியிலிருந்து தான் தசாங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிறார் தசாங்கம் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் திருச்சி, வள்ளி விலாஸ் உரிமையாளர் பிரபு.
தசாங்கம் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து பிரபு நம்மிடம் கூறுகையில், “30 வருடங்களுக்கு முன்பு தசாங்கம் தயாரிப்பில் ஈடுபட்டோம். தசாங்கத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருள் கொல்லிமலையில் உள்ள நரியங்காடு எனும் பகுதியில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை நன்கு உலர்த்தி அரைத்து பொடியாக்கி மற்ற மூலிகை பொருட்களுடன் கலந்து 20 நாட்கள் கழித்தே தசாங்கம் தயாரிப்பு முழுமையடைகிறது.
எங்கள் தசாங்கத்தின் தனிச்சிறப்பு சுவாசப் பிரச்சனைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலிகைகளை மூலப்பொருளாக கொண்டது. தசாங்கம் தயாரிக்கும் மூலிகைப் பொருட்களின் விலை அதிகரிப்பால் தயாரிப்பாளர்கள் பெரும் பாலோர் தசாங்கம் தயாரிப்பை கைவிட்டு விட்டனர். மேலும் ஊதுபத்தியின் விலை குறைவும் தசாங்கத்திற்கான வர்த்தகத்திற்கு போட்டியாக மாறியது. ஆனாலும் தசாங்கத்தின் மகிமை, பயன் உணர்ந்தவர்கள் விலையை ஒரு பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தியதாலேயே தசாங்கம் இன்றளவும் பூஜை பொருட்களில் முக்கிய இடம் வகிக்கிறது.
உள்ளுர் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தசாங்க விற்பனை பெருமளவு வரவேற்பு இல்லாது போனதால் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் கவனம் செலுத்தினோம். அது எங்களுக்கு பெரும் வரவேற்பை தந்தது. பூஜை பொருட்களை வாங்க வருபவர்களின் பொருள் பட்டியலில் வள்ளி விலாஸ் தசாங்கம் என்று எழுதி வருவதே எங்கள் தசாங்கத்தின் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறது” என்றார்.
தசாங்கம் தேவைப்படுவோர் தொடர்புக்கு : பிரபு – 99624 10251
– ச.பாரத்