திருச்சி தில்லைநகரில் குணா பல் மருத்துவமனையின் புதிய கிளை
திருச்சியில் நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சையை 19 வருடமாக அளித்து வரும் குணா பல் மருத்துவமனை 2 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது திருச்சி தில்லைநகர் பிரதான சாலையில் பேட்டா ஷோரூம் எதிரே தனது 3வது கிளையினை தொடங்கியுள்ளது.
குணா பல் மருத்துவமனை. காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், நிர்வாக இயக்குனர் டாக்டர். டி.செங்குட்டுவன் மருத்துவ மனையை திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்வினை மருத்துவர் பிரசன்னா சம்பத் மற்றும் மருத்துவர் அனிதா பிரசன்னா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இம்மருத்துவமனையில் இம்பிளாண்ட் முறையில் பல் கட்டுதல், லேசர் முறையில் ஈறுகளுக்கான மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.