அதிக அறைகள் கொண்ட வீட்டிற்கும் குறைந்த செலவில் ஏசி
அமைத்து தரும் AKCHAYA AIRCON
ஏசியின் பயன்பாடு என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்க ஏசி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. வணிக நிறுவனங்களை தாண்டி ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது ஒரு அறையிலாவது ஏசி பயன்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள், வீடுகள் வரை தேவையான ஏசி பயன்பாட்டை திருச்சி, தென்னூர், கேஎம்சி எதிரே உள்ள பாபுசெட்டித் தெருவில் அமைந்திருக்கக் கூடிய “அக்ஷயா ஏர்கான்” (AKCHAYA AIRCON) பூர்த்தி செய்து வருகிறது.
21 வருட அனுபவம் கொண்ட அக்ஷயா ஏர்கான் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அதிக தரம் வாய்ந்த ஏசிகளை பிரத்தியேகமாக அமைத்து தருகின்றனர். அக்ஷயா ஏர்கான் நிறுவனம் எல்ஜி, ஓஜி நிறுவனங்களினுடைய மொத்த விற்பனையாள ராகவும் உள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருநிறுவனங்கள் தொடங்கி சிறு வீடுகள் வரை அனைத்து விதமான ஏசிக்களையும் அமைத்துத் தருகின்றனர். “எங்களது சிறப்பான செயல்பாடுகளுக்கு பெரும் உற்றதுணையாக இருப்பது எங்களுடன் பணியாற்றும் இன்ஜினியர்கள் தான்” என்கிறார் அக்ஷயா ஏர்கான் நிறுவன உரிமையாளர் ஹரி.
அவர் நம்மிடம் கூறுகையில், “VRF system என்ற சிஸ்டத்தை பயன்படுத்தி ஏசி அமைத்துத் தருகிறோம். அதாவது 100 ரூம்கள் கொண்ட நிறுவனத்திற்கும் ஒற்றை இடத்தில் ஏசிக்கான வெளிப்புறத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து அறைகளுக்கும் ஏசியை கொண்டு செல்லும் யுக்தியை கையாள்கிறோம். இதனால் பொருட்செலவு குறைகிறது. அத்துடன் நாங்கள் அமைத்துத் தரும் இத்தகைய ஏசிக்கள் பவர் சேவிங் கொண்டவை. அதனாலேயே பெரும் நிறுவனங்கள் அதிக அளவில் எங்களை நாடுகின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 610 வீடுகளுக்குத் தேவையான ஏசிக்களை விற்பனை செய்து இருக்கிறோம். நாங்கள் அமைத்து தரும் ஏசிக்கள் 15 வருடம் உத்தரவாதம் கொண்டது. எந்தவித பிரச்சனையும் உண்டாக்காது” என்றார். அதிக அறைகள் கொண்ட வீட்டிற்கும் குறைந்த செலவில் ஏசி அமைக்க விருப்பமுள்ளோர் அக்ஷயா ஏர்கானை 0431-4060274, 9629597274 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அணுகலாம்.