இஎம்ஐ சிக்கல்களிலிருந்து தப்பிக்க வழிகள்…
“தவணைத் திட்டங்களில் அத்தியாவசியமான பொருள்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடனைத் திரும்பக் கட்டும் திறனை அறியாமல், வரவு செலவு விவரங்களை கணக்குக்கூட போட்டுப் பார்க்காமல் பொருள்களை ஒரே நேரத்தில் இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு, கஷ்டப்படுவார்கள்.
கடனைத் திரும்பக் கட்டும் கணக்கீட்டைக் கடன் வாங்கும் முன்பே போட்டுப் பார்க்க வேண்டும். நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப நம் தேவைகளை முடிவு செய்ய வேண்டும்.
வசதிமிக்கவர்களைப் பார்த்து வாழ்க்கைத் தரத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடும்.
பணத்தைச் சேர்த்துக்கொண்டு பொருள்களை வாங்குவது நல்லது. எது தேவை, எந்த அளவுக்குத் தேவை என்பதில் தீர்க்கமான முடிவெடுக்கும் திறன் முக்கியம்.
குறைவான மாத வருமானம் உள்ளவர்கள் தவிர்க்க இயலாத சூழலில் கடன் வாங்கும்போது, நீண்டகாலம் செலுத்தும் வகையில் வாங்கினால் மாதாந்தரச் செலவுகளுக்கு திண்டாடும் நிலை இருக்காது.
நிதித் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் வாழ்க்கைச் சூழலை முழுமையாக அறிந்த உங்கள் மீது அக்கறை கொண்டவர்களிடம் ஆலோசனை செய்தால் தவறுகளைத் தவிர்க்க முடியும்.”