பத்திர பதிவில் பத்திர செலவு மிச்சம் செய்யும் வழி….
சொத்து உரிமை தருவதில் தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதுவது ஒருவகை. பொதுவாக, பணம் பெற்றுக்கொண்டு ஒருவருக்கு சொத்து உரிமை மாற்றம் செய்வதை சொத்து விற்பனை என்போம்.
அதுவே நெருங்கிய உறவுகளுக்குள் எந்தவித பணப்பலன்களும் பெறாமல், இயற்கையான அன்பினாலும் பாசத்தாலும் சொத்து உரிமை மாற்றம் செய்ய விரும்பி, எழுதித் தருவதே தான செட்டில் மென்ட் பத்திரம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கோ, சகோதரர்கள், தங்கள் சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கோ, கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ சொத்துகளை தான செட்டில்மென்ட் பத்திரம் மூலம் வழங்கலாம். இவர்கள் சொத்துகளை மாற்றும் போது அதை விற்பனையாக மேற்கொள்ளாமல் தான பத்திரம் மூலம் வழங்கினால், பத்திர செலவு மிச்சமாகும்.
சொத்தின் வழிகாட்டு மதிப்பு அதிகம். ஆனால் தான பத்திரம் மூலமாக சொத்து வழங்கும்போது பத்திரத்தைப் பதிவதற்கான கட்டணத்துடன் அரசு நிர்ணயம் செய்துள்ள முத்திரைக் கட்டணம் செலுத்தினால் போதும்.