சம்பளதாரர்களுக்கு… பணத்தை மிச்சமாக்கும் வழிகள்…
- நம்மில் பெரும்பாலானோர் சம்பளம் கைக்கு வந்ததும் கண்டபடி செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் செலவுக்கு பிறரிடம் கடன் கேட்கிறோம்.
- சம்பளம் வாங்கியுவுடன், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆரம்பரத்தை மட்டுமே நாடும் மனது. மாத இறுதியில் தான் செலவு செய்வது வீண் என்று உணரும். ஆடம்பரச் செலவு தவிர்த்தாலே பாதி பணம் மிச்சமாகும்.
- ஆஃபர்களுக்கு ஆசைப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆஃபருக்காக மட்டுமே பொருளை தேவையில்லாமல் வாங்குபவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். இப்படி வாங்கிய பொருளை பலரும் அடிக்கடி பயன்படுத்துவதும் இல்லை.
- எல்லாருக்கும் எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு திடீர் செலவுகள் வரும். ஆகையால் தேவையில்லாத செலவுகளை குறைந்து மாதம் மாதம் சேமிப்புக்கு தனி தொகை ஒதுக்குவது நல்லது.
-
- அளவாக உணவுப்பொருட்களை வாங்குவது நல்லது, சிலர் ஆசையினால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பின்பு அவதி அடைகின்கின்றனர். உடல் நலத்தையும் கெடுத்து கொண்டு மருத்துவமனையில் பணத்தை செலவு செய்கின்றனர்.
-
- மற்றவர்கள் வைத்திருக்கும் பொருளை கண்டு ஆசைப்பட்டு வாங்காதீர்கள். உங்களுக்கு அவசியம் தேவை. அதை அடிக்கடி பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் மட்டுமே எந்தப் பொருளையும் வாங்குங்குகள்.
-
- சம்பளம் வந்தவுடன் வேலைப்பழு என கூறி இன்றைய நாளில் அதிகளவு பொழுதுபோக்கு சினிமா, ரெஸ்ராரெண்ட் செல்லும் பழக்கத்தை வைத்துள்ளனர். இதுதவறல்ல, ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சு என்பது போல தொடர்ந்து இது போல செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் திடீர் தேவைகளுக்கும், மாத இறுதியிலும் மற்றவர்களை நாட வேண்டியிருக்கும்.
- பல வீடுகளில் மாத ஆரம்பத்தில் விருந்து போல் சமையல் இருக்கும். மாதக் கடைசியில் மருந்து போல் சமையல் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம், சரியாக செலவுகளைத் திட்டமிடாததுதான்.