எது லாபம்…? இன்சூரன்ஸ் பாலிசி & மியூச்சுவல் பண்ட் ஒப்பீடு
“காப்பீடு என்பது உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் எதிர்பாராமல் நடந்துவிட்டால், நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன செய்வீர்களோ அவற்றைச் செய்யத் தேவையான பண வசதியை ஏற்படுத்தித் தருவதாக இருக்கிறது.
ஆயுள் காப்பீடு ஒரு சொகுசு அல்ல, அது ஒரு முக்கியத் தேவை என்பதை உணர்ந்து பணிபுரியும் / சம்பாதிக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக, உங்கள் வருமானத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பத்தினருக்காக கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குடும்பத்தலைவராக இருக்கும்பட்சத்தில், டேர்ம் பிளான் எனப்படும் குறைந்த பிரீமியத் தொகையில் அதிக காப்பீட்டுத் தொகையுடைய பாலிசியை ஒரு காப்பீடு முகவர் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல 10&12 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நலம். மீதமுள்ள பணத்தை சிறந்த மியூச்சுவல் பண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்து வரலாம்.”