தொழிலில் வழுக்கிவிழும் இடம் எது..?
தொழில் தொடங்கி வெற்றி பெற்ற பிறகு பலரும் வழுக்கி விழும் இடம் எதுவாக இருக்கும் என்பதை புதிய தொழில் முனைவோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வியாபாரத்தில் நல்ல லாபம் பார்த்த பிறகு மேலும் மேலும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்களது நடத்தையை மாற்றிக் கொள்வார்கள். அங்கு தான் அவர்களின் சறுக்கல் தொடங்குகிறது.
அளவு கடந்த இலாபத்திற்குப் பொருட்களை விற்பது, வாடிக்கையாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது, வேலையாட்களைச் சக்கையாகப் பிழிந்தெடுப்பது, சக வியாபாரிகளை நசுக்குவது என மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது ஒரு மோசமான போக்கு!
இத்தகைய செயல் வெற்றி போலத் தென்பட்டாலும் நீண்ட காலத்தில் பெரிய அளவில் நம்மைப் பாதித்து விடும். நம்மை யார் நசுக்கினாலும், திறமை இருந்தால் நாம் முன்னுக்கு வந்து விடலாம். இது போட்டியாளர்களுக்கும் பொருந்தும் தானே. எனவே மேற்குறிப்பிட்ட தவறான செயல்கள் நம்முடைய நேரத்தை, வளர்ச்சியை வீணடிக்குமே தவிர வேறு பலன் எதையும் தராது.