பெரு நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் மோசடி..!
2019-&20-ம் நிதியாண்டில் கடன் மோசடி அளவு ரூ1,82,117 கோடியாக உள்ளது. சென்ற 2018-19 நிதியாண்டில் இது ரூ.64,548 கோடியாக இருந்தது. கிட்டதட்ட மூன்று மடங்கு கடன் மோசடி அதிகரித்துள்ளது.
2020&-21-ன் முதல் 6 மாதத்தில் மட்டும் ரூ.1,10,639 கோடி அளவிற்கு கடன் மோசடிகள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2017-&18ம் ஆண்டில் ரூ.22,558 கோடி அளவிற்கு மட்டுமே கடன் மோசடிகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இது முக்கிய வகிப்பது பெரு நிறுவனங்களே. அதாவது ரூ.5 கோடி மற்றும் அதிகமாகக் கடன் பெற்றுள்ள பெருநிறுவன வாராக் கடன்களின் பங்கு மொத்த வாராக் கடன்களில் 79.8 சதவிகித அளவுக்கு உள்ளது. இதில் குறு, சிறு மற்றும் மத்திய அளவு நிறுவனங்களின் வாராக்கடன் விகிதாசார அளவு கடந்த சில வருடங்களாகக் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.