தொழிலில் வெற்றி பெற உதவும் மைனஸ்..!
உங்கள் திறமையைத் தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உங்களிடம் உள்ள ‘மைனஸ்’ என்னவென்று தெரிந்து கொள்வது.! பிளஸ், மைனஸ் இரண்டும் சேர்ந்த கலவை தான் மனிதர்கள்.
எனவே வெறும் பிளஸை மட்டும் தெரிந்து கொண்டு வியாபாரத்தைத் தொடங்குவது, அபாயச் சங்கிலி இல்லாத இரயிலைப் போன்றது.! தொழிலில் எதிர்கொள்ளும் இக்கட்டான நேரங்களில் உங்களிடம் உள்ள அதிகபட்ச ப்ளஸ்சே உங்களை வீழ்த்திவிடும்.
உதாரணம் : அதீத தைரியம், அதீத நம்பிக்கை, இது வரை நீங்கள் எடுத்த எல்லா முடிவும் சரியாக இருந்தபடியால் இக்கட்டான நேரத்தில் வேறு எவர் பேச்சையும் கேட்கத் தோணாது. இது போன்ற சில ப்ளஸ்கள் தான் உங்களுக்கு மைனஸாக மாறும்.
நீங்கள் ஒரு முடிவு எடுத்தபின் அதில் ஏற்படும் சந்தேகமும், அச்சமும் உங்கள் செயலினை தடுக்கும். அதுவே உங்கள் மைனஸ். அதீத தைரியம், அதீத நம்பிக்கை உங்களிடம் இல்லை.
இப்போது உங்கள் சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி அது சார்ந்த நபர்களிடம் விளக்கம் கேட்பீர்கள். சந்தேகம், அச்சம் உங்களது மைனஸ் என்றால் அது குறித்து நீங்கள் அறிய முற்படுவது உங்களை ப்ளஸ்சினை நோக்கி முன்னேற்றும். சந்தேகம், அச்சம் மாற்று வழியை கற்றுத் தரும்.