வெற்றியாளர்கள் சொல்கிறார்கள்..!
முகேஷ் அம்பானி, சேர்மன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
- உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
- மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
- ரிஸ்க் எடுப்பது மிகச் சிறந்த பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
- வெற்றியின் மீது எப்போதும் ஆவல் கொண்டிருங்கள்.
- உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள்.
- எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.
முகேஷ் அம்பானி, சேர்மன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
ஜெப் பீசோஸ், நிறுவனர், அமேசான் நிறுவனம்
- நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
- நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள்
- உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விஷயத்தையே பின்பற்றுங்கள்.
- வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்கள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.
- மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்ப்பளிக்கும்.
- உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.
ஜாக்மா, நிறுவனர், அலிபாபா குழுமம்
- புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
- குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.
- உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுக் கொண்டே இருங்கள்.
- உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
- முதலில் வாடிக்கையாளர்கள். இரண்டாவது ஊழியர்கள், மூன்றாவது தான் முதலீட்டாளர்கள்.
- நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமையை புகுத்துதல்,
கலாச்சாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.