Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் வாட்ஸ்-அப்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் வாட்ஸ்-அப்..!

வாட்ஸ்அப் செயலியின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி வாட்ஸ்அப் பயனர்கள் இந்த புதிய நடைமுறைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தவறினால் அவர்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்பட வேண்டியதிருக்கும். பின்னர் பிப்ரவரி 8ம் தேதி முதல் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. மேலும் வாட்ஸ்அப் கணக்கை நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் இருந்தால் அந்த கணக்கு நீக்கப்படும். வாட்ஸ்அப் சொல்லும் அந்த புது விதிகள் என்ன என்று பார்ப்போமே.!

WHATSAPPல் நீங்கள் அனுப்பும் Messageஐ அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும். அதை FACEBOOK-சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உதாரணத்திற்கு : நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை (Message) WHATSAPP நிறுவனம் எடுத்து FACEBOOK, INSTAGRAM etc., போன்ற அவர்களின் வலைத்தளத்தில் பயன்படுத்துவார்கள். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமான விளம்பரங்களைத் அதில் தருவார்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நீங்கள் அனுப்பும் forward messages-ஐ இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages–ஐயும் தங்களது சர்வரில் (Server) சேகரித்துக் கொள்வார்கள்.

WHATSAPP–ல் இருக்கும் Features–ஐ பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy -க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features–ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

உதாரணத்திற்கு உங்களுடைய Location-ஐ உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும். Location மட்டுமின்றி உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message-ஐயும் கூட சேகரிப்பார்கள். நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது. அது WHATSAPP நிறுவனத்தின் Server–ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும். 30 நாட்களுக்குப் பின்பே நீக்கப்படும்.

WHATSAPP நிறுவனம் நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS) என்ன, எந்த நிறுவன சிம் பயன்படுத்துகிறீர்கள், அதன் நம்பர், எவ்வளவு சிக்னல் (Signal Strength), பேட்டரியின் அளவு, நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள். உங்கள் Mobile-¡ IP Address, Time Zone, Language போன்ற பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். நீங்கள் Privacy Policy மற்றும் Terms of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். எனவே ஒப்புதல் (agree) கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நேரம் உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.