Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

‘சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஒரு பிசினஸ் மேனாக வலம் வரவேண்டும் என்பது என் மனத்தில் இருக்கும் நீண்டநாள் ஆசை. சொந்தத் தொழில் தொடங்குவதற்கு கையில் ஓரளவுக்கு பணமும் இருக்கிறது. ஆனால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. நல்ல லாபம் கிடைக்கிற மாதிரி, எனக்கு தோதான ஒரு பிசினஸை சொல்ல முடியுமா?

இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்ட பின்னும் பதில் கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர். ஒரு காலத்தில் பிசினஸ் என்றாலே அதில் இறங்க பலரும் பயப்படுவார்கள். ஆனால், இன்றைக்கு நிறைய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அரசாங்க வேலை வாய்ப்புகள் குறைந்தது; பிசினஸ் நடைமுறைகள் ஓரளவுக்கு எளிதாக இருப்பது என சமீபத்தில் நடந்த பலமாற்றங்களின் விளைவாக, இன்றைய இளைஞர்களின் கவனம் பிசினஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. என்றாலும், தனக்கான தொழில் எது என்பதைத் தேர்வு செய்வதில் பலருக்கும் பலவிதமான குழப்பம். ஏற்கெனவே தெரிந்த தொழிலை செய்வதா, புதிதாகக் கற்றுக் கொண்டு செய்வதா என பல கேள்விகள்.

உங்களுக்கான தொழிலை நீங்கள் கண்டுபிடிப்பது எப்படி? சொந்தத் தொழில் செய்வதற்கான விருப்பமுள்ளவர்களை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்வோம்:

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

1. முன் பின் வேலைக்குச் செல்லாதவர்கள் அல்லது தொழில் அனுபவம் சிறிதும் இல்லாதவர்கள் (இருபதுவயதில் உள்ள இளம்வயதினர்).
2. சில ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் (முப்பது/நாற்பது வயதில் இருப்பவர்கள்).
3. ஓய்வுக்காலம் வரை வேலையில் இருந்தவர்கள் (ஐம்பது / அறுபதுகளில் இருப்பவர்கள்).

முன்பின் வேலைக்கு செல்லாத இளம் வயதினர்
முதலில், இளம்வயதினரைப் பார்ப்போம். இந்த வயதினருக்கு அதிக முதிர்ச்சி இருக்காது. ஆகவே, ஓரிரு நண்பர்களுடன் அல்லது சற்று முதிர்ச்சியான நபர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தால், தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இவர்கள் கல்லூரியில் படித்த போது ஏதேனும் புராஜக்ட் செய்திருந்தார்களேயானால், அதைச் சார்ந்த தொழிலை ஆரம்பிக்கலாம். இளம் வயதினர் என்பதால் சற்று புதியதொழில் நுட்பம் உள்ள தொழில்களை அல்லது ஆராய்ச்சி சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கலாம். வேறு தொழிலதிபர்களுடன் ஒப்பிடும்போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய அனுகூலம் ஆகும்.

எந்தத் தொழில் செய்ய விருப்பம் என முடிவுசெய்து விட்டால், ஓராண்டாவது அந்தத் தொழிலில் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெறுங்கள். அனுபவம் இல்லாமல் எந்தத் தொழிலிலும் இறங்கி ஜெயிக்க முடியாது. தொழில் ஆர்வமுள்ள இளம் வயது வாலிபர்களுக்கு எந்தத் தொழிலைப் பார்த்தாலும் அதைச் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தச் சமயம் ஆர்வத்தை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தத்தில் தனக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என நன்கு யோசிக்க வேண்டும்.

இந்த வயதினருக்குத் தொழில் அனுபவம் இருக்காது என்பதால், புதிதாக எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் இறங்கலாம். ஏனென்றால், எந்தத் தொழில் என்றாலும் இவர்களுக்குப் புதிய ஆரம்பம்தான். இவர்கள் முதலில் எந்தத் துறையில் நல்லவாய்ப்பு உள்ளது, எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் மற்றும் நல்ல லாபம் இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் துறை தங்களுக்குப் பிடிக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அல்லது தங்களால் அந்தத் துறையை நேசிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பொதுவாக, இந்த வயதினரிடம் அதிகமாகப் பணம் இருக்காது என்பதால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களை நாடலாம். ஐ.டி, லாஜிஸ்டிக்ஸ், புரோக்கிங், டிரேடிங், சுற்றுலா திட்டமிடல், சர்வீஸ் மையங்கள் போன்ற சேவைத் தொழில்களை ஆரம்பிக்கலாம். சிறிய வயது என்பதால் அவர்களால் நன்றாக அவர்களின் சேவைகளை/ உற்பத்தி செய்யும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

சில ஆண்டுகளுக்கு வேலைக்கு சென்ற நடுத்தர வயதினர்

இவர்கள் சில ஆண்டு மட்டுமே வேலைக்குச் சென்றவர்கள். வேலை பிடிக்காமலோ அல்லது வேலை திடீரென்று போய்விட்டதாலோ அல்லது தொழில் செய்வதன் மீது உள்ள அளவிட முடியாத ஆர்வத்தினாலோ அல்லது இரண்டாவது வருமானம் தேடியோ தொழில் செய்ய முன்வருவார்கள்.

இந்தநிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தொழில் பற்றிய ஞானம் ஓரளவுக்கு இருக்கும். அதன்நெளிவு சுழிவுகள் புரிந்திருக்கும். ஓரளவுக்கு முதிர்ச்சியும் வந்திருக்கும். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைப் பொறுத்து, அந்தத் தொழில் பற்றிய விவரங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகவே, இந்த அறிவை வைத்து அதே தொழிலையோ அல்லது அது சார்ந்த தொழிலையோ ஆரம்பிப்பது தான் உசிதமாக இருக்கும்.

இவர்கள் ஏற்கெனவே பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கலாம். அந்த நிறுவனத்திலிருந்து விலகிய பின் அந்த நிறுவனத்துடன் நல்லஉறவு வைத்திருக்கலாம். அப்படி இருப்பவர்கள், அந்த நிறுவனம் தரும் கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யலாம்.

அந்த நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வாங்கித் தரலாம். பெரிய தொழில் நிறுவனங்களில் இன்ஜினீயராக வேலை பார்த்தவர்கள், தன்னோடு நன்கு பழகிய, திறமைசாலி நண்பர்களுடன் சேர்ந்து, புதிதாக தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே செய்த தொழிலோடு உங்களுக்கு எந்தளவு உறவு உள்ளதோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றி உறுதி!

ஓய்வுக்காலம் வரை வேலையில் இருந்தவர்கள்
இனி, மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். நான் ஓய்வு பெறுகிற வரை ஆட்டோ மொபைல் துறையில் அல்லது வங்கியில் வேலை செய்தேன் என்று சொல்பவர்கள், அந்தத் துறை சார்ந்த தொழிலை ஆரம்பிப்பது தான் சிறந்தது. காரணம், முன்பின் தெரியாத ஒருதொழிலை இந்தவயதில் புதிதாகத் தெரிந்து கொண்டு செய்வதை விட, ஏற்கெனவே நன்கு தெரிந்த தொழிலில் ஜெயிப்பது சுலபம். தவிர, வயது அதிகம் என்பதால், முற்றிலும் புதிய தொழிலில் நுழைந்து ரிஸ்கும் எடுக்க முடியாது.

உதாரணமாக, வங்கியில் வேலை பார்த்தவர்கள் வங்கிகளுக்கு ஆடிட்டிங் செய்து தரலாம் அல்லது லோன் பிராசஸிங் ஏஜென்சி நடத்தலாம். கடன் ஆலோசகராகத் தொழில் செய்யலாம். இப்படி பலவிதமான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் எளிதாகக் கண்டு பிடித்து, அந்தத் தொழில் செய்து எளிதில் ஜெயிக்க முடியும்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.