ஒரு மனிதன் ஏன் தோற்கிறான் ?
ஆர்வமின்மை : ஒரு மனிதன் எவ்வளுவு தான் புத்தி கூர்மை உள்ளவவராக இருந்தாலும் அவர் செய்யும் செயலில் ஆர்வம் இல்லை என்றால் இயல்பாகவே அவரால் தனது முழு திறமையையும் உபயோகிக்க முடியாது . ஆர்வம் என்றால் சிலருக்கு சூழ்நிலை காரணமாகவோ அல்லது இயற்கையாகவோ இருக்கக்கூடும் .ஆர்வம் முழுமையாக இருக்கும் பொழுது மட்டுமே அவரால் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும் .
சுயக்கட்டுப்பாடு இல்லாமை: இது முக்கியமான காரணம் ஆகும்.சிறிய பிரச்சனை களுக்காக கூட தங்களை சுய கட்டுப்பாட்டை பயன் படுத்த முடியாதவர்கள் . அவர்களின் மனம் சொல்லும் படியெல்லாம் நடந்து கொண்டு நேரத்தை வீணடிப்பது .
நீடித்து இல்லாதிருத்தல் : சில நாட்களுக்கு மட்டும் உழைத்து விட்டு எனக்கு பலன் கிடைக்கவில்லை என்று முயற்சியை கைவிட்டு விடுதல். ஆனால் உண்மையில் வெற்றி சில தூரம் இருக்கும் வேலையில் முயற்சியை விட்டு விடுதல் .
தவறான அணுகுதல் : பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று கற்றுக்கொள்ளாமல் தவறான முறையில் அதை அணுகி பின் தோல்வியை தழுவி விட்டோம் என்று வருந்துதல்.
சிந்தனைகளை செயலில் காட்டாமல் இருத்தல் : பல மனிதர்கள் ஆற்றல் மிக்க சிந்தனை உடையவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செயலில் செய்யாதவரை அந்த சிந்தனைகள் எவ்வளவு ஆற்றல் மிக்கவைகளாக இருந்தாலும் பலனை தராது .
உற்பத்தித்திறன் இல்லாமை: குறிப்பிட அளவு செயலை மட்டும் செய்து விட்டு வெற்றியை எதிர்பார்த்து இருத்தல் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியை பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் செயல் படுத்தல்
செயலை முழுவதுமாக நிறைவு செய்யாமை : ஒரு செயலை முழுவதுமாக முடிக்காமல் அதன் முடிவுகளின் மீது பயத்தைகொண்டிருத்தல் .
செயலை துவங்காமல் இருத்தல் : சில மனிதர்கள் செயலை துவங்காமல்அதனை தள்ளிப்போடுக்கொண்டு நேரத்தை வீணடித்தல் .
தோல்வி வந்து விடுமோ என்ற பயம் : தோற்று விடுவோமோ என்று அஞ்சியே திறமையை முழுமையாக பயன்படுத்தாமல் இருத்தல் .
மற்றவர்களின் கட்டளைக்காக காத்திருத்தல்: சில மனிதர் கள் சில இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே செயலை மேற்கொள்வார்கள் சிறிய செயலாக இருந்தாலும் மற்றவர்களின் கட்டளைக்காக காத்திருப்பவர்கள் .
மற்றவர்களின் மீது பழி சுமத்துதல்: சிலர் தங்களின் குற்றத்தை மறைக்க சந்தர்பத்தின் மீதோ அல்லது சூழ்நிலையின் மீதும் பழி சொல்லிக்கொண்டு திரிதல் .
தாழ்வு மனப்பான்மை : தங்கள் செய்த குற்றத்தை எண்ணி எண்ணி அதிலிருந்து மீளாமல் தங்களை மேலும் தாழ்வாக எண்ணிக்கொண்டு இருத்தல் .
அதிகமாக பிறரை சார்ந்து இருத்தல் : சிலர் தங்களின் எந்த தேவையாக இருந்தாலும் பிறர் தனக்காக அதை செய்வார்கள் என காத்துக்கொண்டு இருத்தல் .
சுய பிரச்சனைகளில் மூழ்கி இருத்தல் : சில மனிதர்கள் சில சோகமான பழைய நினைவுகளில் மூழ்கி இருந்து எதிர்காலத்தை பற்றி கவ லை கொள்ளாமல் இருத்தல் .
போதிய கவனம் இல்லா திருத்தல் : சில மனிதர்கள் தங்களின் லட்சியத்தின் மீது போதிய கவனம் செலுத்தாமல் இருத்தல் . அதிகமான புத்தி கூர்மை உள்ள மனிதர்களும் கூட போதிய கவனம் செலுத்தாமல் இருத்தல் என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரே சமயத்தில் பல விஷயங் களில் கவனம் செலுத்துதல் : ஒரே ஒரு செயலில் முழு கவனம் செலுத்துவதற்கு பதிலாக பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி இறுதியில் ஒன்றை கூட முடிக்காமல் இருத்தல் .
பொறுமை இல்லாமல் இருத்தல் : சில மனிதர்கள் தற்காலிக சந்தோஷத்திற்காக பொறுமையை இழந்து நிலை யான மகிழ்ச்சியை இழத்தல் .
தெளிவான முன்னோக்கு பார்வை இல்லாமை : ஒரு மரம் தன கண்ணிற்கு முன் இருக்கின்றது என்ற காரணத் திற்காக காடு தெரியவில்லை என்ற உதாரணம் இவர்களுக்கு பொருந்தும் .முதல் படியை பிடித்தல் போதும் மீதம் உள்ள படிகள் தானாகவே புலப்படும் என்பதை அறியாமல் இருத்தல்
சிந்தனையில் தெளிவு இல்லாமை : ஆராயக்கூடிய அறிவை மட்டும் பயன்படுத்து தலும் அல்லது கற்பனை அறிவை மட்டும் பயன் படுத்துதலும் இதற்கு உதாரணம் ஆகும் . இந்த இரண்டு அறிவும் சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் .
சுய நம்பிக்கை இல்லாமை : இது தோல்விக்கு மிகமுக்கியமான காரணம் ஆகும் ஏனெனில் நம்பிக்கை என்ற அடிப்படை இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றி அடையும் வாய்ப்பு குறைவு எனவே நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் முக்கியமாக உள்ளது .