நல்ல மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்யும் முன்…
‘‘முதலீட்டாளரின் முதலீட்டு இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடு களைத் திட்டமிடுவது முக்கியம். குறுகிய காலத்துக்கு முதலீடு செய்ய விரும்பும் பழைமைவாத அல்லது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு பங்கு சார்ந்த முதலீடுகள் சரியான தேர்வாக இருக்காது. ஃபண்டின் வகையைப் புரிந்துகொள்ள அதன் முதலீட்டு இருப்புகளை விரிவாகப் படிக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளைப் பெரும்பாலும் ஈக்விட்டி சார்ந்தவை, கடன் சார்ந்தவை அல்லது இரண்டும் கலந்த ஹைபிரிட் வகை எனப் பிரிக்கலாம். அதன் பிறகு, பெரிய நிறுவனங்களா அல்லது சிறிய நிறுவனங்களா என்று பார்க்க வேண்டும். லார்ஜ்கேப் ஃபண்டுகள் சந்தை ஏற்ற இறக்கத்தால் பெரிதாகப் பாதிப்புக்குள்ளாகாது. ஆனால், நீண்ட காலத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகளைவிட குறைவாகவே வருமானம் தரும்.
மேலும், ஒரு ஃபண்டைத் தேர்வு செய்யும்முன் அந்த ஃபண்டின் செலவு விகிதம், ஃபண்டிலிருந்து முதலீட் டாளர்கள் வெளியேறும் விகிதம், பங்கு இருப்புகளின் செறிவு, ஃபண்ட் தந்துள்ள ரிட்டர்ன் விவரங்கள், ஃபண்ட் மேனேஜரின் வரலாறு, அதன் முதலீட்டுக் கொள்கை உள்ளிட்ட காரணிகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.