புதிய தனியார் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பது ஏன்?
நாட்டில் பிரபல சீட்டு மற்றும் கடன் நிறுவனங்கள் வங்கிகளாக மாற்ற ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் பெரு நிறுவனங்களும் வங்கி தொடங்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இவ்வகையில் பெருநிறுவனங்கள் வங்கிகளாக்க அனுமதி தருவதால் அவை ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் வட்டி வீதத்தில் தான் கடன் வழங்க முடியும்.
இது வாடிக்கையாளர்களுக்கு லாபமாகும். இதனால் தனியார் வங்கிகள் பெருகும். இதனால் வங்கித்துறையில் அரசின் நேரடி சுமை குறையும் என்ற முடிவில் ரிசர்வ் வங்கி அனுமதிக்க முடிவு செய்துள்ளது. “ஒரே தலைமை கடன் கொடுப்பவராகவும், கடன் வாங்குபவராகவும் இருக்கையில் அவ்வங்கியில் மக்களின் டெபாசிட் பணத்திற்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிகிறது.
மேலும் இவ்வகையில் கடன் பெற்ற நிறுவனங்கள் நஷ்டமடைந்தால், கடன் கொடுத்த வங்கியும் திவாலாகும். வங்கி வாடிக்கையாளர்களின் பணமும் பறிபோய்விடும். மக்களுக்கு வங்கிகள் மீதான நம்பிக்கையும் போய்விடும். எனவே தனியார் வங்கி ஆரம்பிக்க அனுமதி தரும் ரிசர்வ் வங்கிக்கு அதிக அதிகாரம் தேவை” என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் எச்சரிக்கை செய்துள்ளார்.